5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Income Tax : ரூ.2 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை.. மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிரடி உத்தரவு!

Tax above 2 Lakhs | வருமான வரிச் சலுகைகளை பயன்படுத்தும் வருமான வரிதாரர்கள் சிலர், வருமான வரியை குறைக்க தங்களது வங்கி கணக்கில் நடைபெற்ற நிதி பரிவர்த்தனைகளை மறைப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு, வருமான வரித்துறைக்கு நேரடி வரிகள் வாரியம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

Income Tax : ரூ.2 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை.. மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிரடி உத்தரவு!
ரூபாய் நோட்டுகள்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 20 Aug 2024 11:36 AM

வருமான வரி : கடந்த 1961 ஆம் ஆண்டு, இந்தியாவில் வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி , இந்தியாவில் வருமான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டம்தான் வருமான வரி வசூல், கணக்கீடு மற்றும்  நிர்வாகம் ஆகியவற்றுக்குக்கு முதன்மையாக உள்ளது. இந்த சட்டத்தில் வரி செலுத்துவோருக்கான உரிமைகள் மற்றும் பொறுப்புகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வருமான வரிச் சட்டம் 1961-ல் பிரிவு 80C, பிரிவு 80D, பிரிவு 10, பிரிவு 10D போன்ற பிரிவுகள் மற்றும் துணை பிரிவுகள் உள்ளன. இந்த பிரிவுகள் மூலம் வரி செலுத்துவோர் தங்கள் வரிக்குட்பட்ட வருமானத்திற்கு வரி விலக்கு பெற முடியும்.

இந்த நிலையில், வருமான வரிச் சலுகைகளை பயன்படுத்தும் வருமான வரிதாரர்கள் சிலர், வருமான வரியை குறைக்க தங்களது வங்கி கணக்கில் நடைபெற்ற நிதி பரிவர்த்தனைகளை மறைப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு, வருமான வரித்துறைக்கு நேரடி வரிகள் வாரியம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க : Atal Pension Yojana : ரூ.7 செலுத்தினால் போதும்.. மாதம் ரூ.5,000 பெறலாம்.. அசத்தல் திட்டம்!

மத்திய செயல் திட்டம் 2024 – 2025

இது தொடர்பாக மத்திய செயல் திட்டம் 2024 – 2025 ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக நடைபெறும் பண பரிவர்த்தனைகளை குறித்து வருமான வரித்துறைக்கு நிதி பரிவர்த்தனை அறிக்கை மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் சமீப காலமாக அத்தகைய தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை. கடந்த சில ஆண்டுகள் நடைபெற்ற பரிவர்த்தனைகளை ஆராய்ந்து பார்க்கும்போது இத்தகைய மோசடி பரவலாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோர் குறித்த தகவல்களை சரிபார்க்க வேண்டும்

வருமான வரிச் சட்டம் பிரிவு 139 ஏ படி, குறிப்பிட்டப் பரிவர்த்தனைகளில் பான் எண் வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த விதி முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய எந்த வழிமுறையும் இல்லை. குறிப்பாக அதிக மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளின்போது வரி செலுத்துவோர் குறித்த தகவல்களை சரிப்பார்க்க வேண்டும். எனவே இதற்கான ஆதாரங்களை வருமான வரித்துறை கண்டறிவது கட்டாயமாகும்.

விதி மீறலில் ஈடுபட்ட பெரிய நிறுவனங்கள்

தற்போதைய சூழலில் சொகுசு ஓட்டல்கள், விருந்து அரங்குகள், ஆடம்பர பிராண்ட் விற்பனையாளர்கள், செயற்கை கருத்தரிப்பு மையங்கள், மருத்துவமனைகள், பெரிய ஆடை வடிவமைப்பாளர் கடைகள் உள்ளிட்ட பெரிய பண பரிவர்த்தனை மையங்களில் விதிகள் கடைபிடிக்கப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இத்தகைய இடங்களின் பெரிய நிதி பரிவர்த்தனைகளை கண்காணித்து ஆதாரங்களை வருமான வரித்துறை அடையாளம் காண வேண்டும் என்றும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி சரிபார்க்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

அதிகரித்த வரி பாக்கி

மேலும், வரி பாக்கி அதிகரித்து வருவது கவலைக்குறியதாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,2023 ஏப்ரல் 1 ஆம் தேதி 24.51 லட்சம் கோடியாக இருந்த பாக்கி, கடந்த 2024, ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.43 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது அதிரடியாக உயர வாய்ப்புள்ளதால், உடனடி மற்றும் அவசர நடவடிக்கை வேண்டும் என்றும் அதில் கூறப்படுட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News