5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadhaar Correction : திருமணத்திற்கு பிறகு ஆதாரில் குடும்ப பெயரை நீக்குவது எப்படி.. முழு விவரம் இதோ!

Name Change | இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் தனிநபர் அடையாள அட்டையாக மட்டுமன்றி, முக்கிய முகவரி சான்றிதழாகவும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேறுவது முதல் மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Aadhaar Correction : திருமணத்திற்கு பிறகு ஆதாரில் குடும்ப பெயரை நீக்குவது எப்படி.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 21 Oct 2024 17:19 PM

ஆதாரில் ஒருவரின் பெயர் முகவரி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இருப்பதால், அது இந்திய குடிமக்களின் தனிநபர் அடையாள அட்டையாக கருதப்படுகிறது. இந்த நிலையில், ஆதாரில் இருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. மொபைல் எண்ணை மாற்றினாலோ, வீட்டு முகவரியை மாற்றினாலோ அதை கட்டாயம் ஆதாரில் அப்டேட் செய்ய வேண்டும். இதேபோல திருமணத்திற்கு பிறகு பெண்கள் தங்களது குடும்ப பெயரை மாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். எனவே, ஆதாரில் ஒருவரின் குடும்ப பெயரை நீக்குவது எப்படி என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Ration Card : ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி.. முழு விவரம் இதோ!

ஆதாரில் தகவல்களை புதுப்பிப்பது ஏன் அவசியம்?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் தனிநபர் அடையாள அட்டையாக மட்டுமன்றி, முக்கிய முகவரி சான்றிதழாகவும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேறுவது முதல் மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் பல காரியங்களை செய்யவே முடியாத நிலை உள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ள நிலையில், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது. இந்த நிலையில், திருமணமான பெண்கள் தங்களது குடும்ப பெயரை ஆதாரில் இருந்து மிக சுலபமாக நீக்கிவிடலாம்.

இதையும் படிங்க : EFPO : PF பயனர்களுக்கு இனிப்பான செய்தி வழங்கிய EPFO.. விதிகளில் மாற்றம்!

ஆதாரில் குடும்ப பெயரை மாற்றுவது எப்படி?

  • ஆதாரில் குடும்ப பெயரை நீக்க, பயனர்கள் தங்கள் வீட்டின் அருகில் உள்ள ஆதார் இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.
  • அங்கு ஆதார் திருத்த படிவத்தை பெற்று அதில் தங்களது ஆதர் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதாவது, பெயர் திருத்தம் செய்யப்பட வேண்டிய நபரின் முழு பெயர், ஆதார் நம்பர், மொபைல் எண் உள்ளிட்ட தேவையான விவரங்களை பதிவு செய்து விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.
  • அதில் பயனர் புதிதாக சேர்த்துக்கொண்ட குடும்ப பெயர் உட்பட எந்தெந்த மாற்றங்களை செய்ய வேண்டுமோ அந்த தகவல்கள் அனைத்தையும் குறிப்பிட வேண்டும்.
  • ஒருவேளை பெயரை மாற்ற விரும்பும் நபர் திருமணமான பெண் என்றால், அவர் வீட்டின் முகவரியை மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.
  • குடும்ப பெயரை மாற்றுவதற்கு கணவரின் ஆதார் கார்டு, திருமண சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய சான்றுகளை எடுத்து செல்ல வேண்டியது அவசியம்.
  • படிவத்தில் தகவல்களை நிரப்பிய பிறகு படிவத்தை ஆதார் பதிவு மையத்தில் சமர்பிக்க வேண்டும்.
  • அப்போது பயோமெட்ரிக் விவரங்கள் சரிப்பார்க்கப்பட்டு, புதிய புகைப்படமும் எடுக்கப்படும்.
  • இதன் பிறகு சில நாட்களுக்குள் குடும்ப பெயர் மாற்றம் செய்யப்படும்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், ஆதாரில் இருந்து குடும்ப பெயரை எளிதாக நீக்கிவிடலாம்.

இதையும் படிங்க : DA Hike : அகவிலைப்படி உயர்வால் ஊதியத்தில் ஏற்றம்.. யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

ஆதாரில் உள்ள விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ ஆணையம் கூறுகிறது. எனவே ஆதார் கார்டில் விவரங்கள் புதுப்பிக்கப்படுவது கட்டாயமாக உள்ளது. ஒருவேளை ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் புதுப்பிக்கப்படாமலே இருந்தால் அதன் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News