5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave: நாளை முதல் 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை.. கொண்டாட்டத்தில் மாணவர்கள்..!

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள்ளுகு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க தாமதமானால் குறைந்த பட்சம் 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தொடர்ந்து பள்ளிகளுக்கு 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

School Leave: நாளை முதல் 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை.. கொண்டாட்டத்தில் மாணவர்கள்..!
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 23 Aug 2024 16:19 PM

பள்ளிகளுக்கு விடுமுறை: நாளை முதல் பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளிகள் 200 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்படும். ஆனால் இந்த நடைமுறையை மாற்றி பள்ளிக்கல்வித்துறை இந்த ஆண்டு 220 நாட்கள் வேலை நாட்கள் என அறிவிப்பை வெளியிட்டது. அதாவது சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என்ற வகையில் இந்த அறிவிப்பு வெளியானது. இது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்தபட்சம் 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள்ளுகு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க தாமதமானால் குறைந்த பட்சம் 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தொடர்ந்து பள்ளிகளுக்கு 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Also Read: TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் பதவியேற்பு.. தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்படும் என உறுதி..!

நாளை 4 வது சனிக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை என்பதால் அன்றைய தினம் விடுமுறை, வரும் 26 ஆம் தேதி திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. சனி மற்ரும் ஞாயிற்றுகிழமை தொடர்ந்து பண்டிகை நாள் வருவதால் அன்றைய தினமும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Also Read: பரபரப்பாக பேசப்பட்ட ஹேமா கமிஷன் அறிக்கை… எந்த பலனும் இல்லை என நடிகை தனுஸ்ரீ தத்தா காட்டாம்

கடந்த வாரம் வியாழக்கிழமை அதாவது ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் பள்ளிகள் செயல்படும் காரணத்தினால் பல தனியார் பள்ளிகள் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளித்திருந்தது. இந்த வாரம் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Latest News