5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தெலுங்கில் ரீமேக்காகும் ‘ஆவேசம்’… ரங்காவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கான முக்கியத்துவம் இல்லையென்றாலும், ஒரு பாட்டுக்காவது நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், ஆவேசம் திரைப்படத்தில் ஹீரோயின் இல்லாமல், வழக்கமான திரைப்படத்திற்கான அனைத்து பிம்பத்தையும் உடைத்து வெளியான ‘ஆவேசம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

தெலுங்கில் ரீமேக்காகும் ‘ஆவேசம்’… ரங்காவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
ஆவேசம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Aug 2024 07:58 AM

நடிகர் பகத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘ஆவேசம்’ படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பகத் பாசில். வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் என தமிழில் வெறும் 4 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தனது அசாத்தியமான நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார் பகத் பாசில். குறிப்பாக எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை கையாண்ட விதத்தால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் என மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக இருந்துவருகிறார் பகத். கண்களாலேயே ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்தி ஆச்சரியமளித்துவருகிறார்.

இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆவேசம்’. இந்தப் படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு,பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே மலையாள திரைப்படங்கள் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம் ஆகிய திரைப்படங்கள் 100 கோடி வசூல் லிஸ்டில் இணைந்து வரலாற்று சாதனை படைத்த நிலையில், அந்த வரிசையில் ஃபஹத் பாசில் நடித்த ஆவேசம் திரைப்பட பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

பிரமயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு என அடுத்தடுத்து வெளியான அனைத்து மலையாள திரைப்படங்களும் மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது.  நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி அமோகமான வரவேற்பை பெற்று உலக அரங்கில் மலையாள சினிமா தனியிடத்தை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கான முக்கியத்துவம் இல்லையென்றாலும், ஒரு பாட்டுக்காவது நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், ஆவேசம் திரைப்படத்தில் ஹீரோயின் இல்லாமல், வழக்கமான திரைப்படத்திற்கான அனைத்து பிம்பத்தையும் உடைத்து வெளியான ‘ஆவேசம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

Also read… இந்த மாதம் இறுதி வரை தியேட்டரில் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

ஆவேசம் திரைப்படத்தை முழுக்க முழுக்க தன் தோளில் சுமந்து நடிப்பில் மிரட்டி விட்டார் பகத் பாசில். ரங்கண்ணனாக அவர் படத்தில் அட்டாகாசம் செய்துள்ளதை கொண்டாடவே திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. அத்துடன் பாக்ஸ் ஆபீஸிலும் இப்படம் வசூலை வெற்றிநடைப்போட்டது. இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும், பாலகிருஷ்ணா ஆவேசம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Latest News