5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fact Check: நடிகர் சூர்யா ரூ.120 கோடிக்கு தனி விமானம் வாங்கினாரா? உண்மை இதுதான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிக் கட்டிப் பறப்பவர் நடிகர் சூர்யா. தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியையே சந்தித்தது. அதனையடுத்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர் வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

Fact Check: நடிகர் சூர்யா ரூ.120 கோடிக்கு தனி விமானம் வாங்கினாரா? உண்மை இதுதான்!
நடிகர் சூர்யா
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Aug 2024 14:26 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா ரூ.120 கோடிக்கு தனி விமானம் வாங்கியதாக இணையத்தில் செய்திகள் தீயாய் பரவி வருகின்றது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம், இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா தனது 44-வது படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிக் கட்டிப் பறப்பவர் நடிகர் சூர்யா. தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியையே சந்தித்தது. அதனையடுத்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர் வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

தீபாவளியை ஒட்டி சூர்யாவின் கங்குவா படம் ரிலீசாகவுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் தான் வெளிவந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அக்டோபர் 10ஆம் தேதி வெளிவரவிருக்கும் கங்குவா திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

Also read… Megha Akash : மேகா ஆகாஷ் திருமண நிச்சயம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

இந்த நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிறகு சூர்யா 44 படத்தின் டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். ஒரு மாதத்தை தாண்டி அந்தமானில் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் படத்தின் முதல்கட்ட சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் படங்களின் அப்டேட் ஒருபக்கம் வரிசையாக வந்துக்கொண்டிக்கும் நிலையில் தற்போது அவர் தனி விமானம் வாங்கியதாக ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அந்த வகையில்  Dassault Falcon என்கிற அந்த பிரைவேட் ஜெட்டின் விலை ரூ.120 கோடி இருக்கும் என்றும், இந்த தனி விமானத்தில் நவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும் அதிகளவில் உள்ளது என்றும் தகவல்கள் வைரலானது. தமிழ் திரையுலகில் முன்னதாக நயன்தாரா, ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் தனி விமானம் வைத்திருக்கும் நிலையில், தற்போது சூர்யாவும் அந்த பட்டியலில் இணைந்ததாகவும் செய்திகள் பரவின.

ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என்று சூர்யாவின் நெறுங்கிய வட்டத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி பிரைவேட் ஜெட்டை சூர்யா வாங்கியதாக வரும் தகவலில் எந்தவொரு உண்மைத் தன்மையும் இல்லை என விளக்கியுள்ளனர்.

Latest News