5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vijay’s Car : விஜய் வாங்கியுள்ள புதிய காரில் இவ்வளவு வசதிகளா? விமானத்துக்கு இணையாக சிறப்பம்சங்கள்!

சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய இவர், கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக விஜய் நடிக்க உள்ள அடுத்தடுத்து படங்கள் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது. கோட் படத்தை முடித்துவிட்டு அரசியலில் கவனம் செலுத்தவிருக்கும் விஜய் அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Vijay’s Car : விஜய் வாங்கியுள்ள புதிய காரில் இவ்வளவு வசதிகளா? விமானத்துக்கு இணையாக சிறப்பம்சங்கள்!
விஜய்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Aug 2024 17:46 PM

நடிகர் விஜய் வாங்கியுள்ள புதிய காரில் உள்ள வசதிகள் மற்றும் அதன் விலை குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்துக்கு இசையமைத்த யுவன், அதன் பின்னர் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்திருக்கிறார். விஜய் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார்.

சென்னை, ரஷ்யா, திருவனந்தபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய இவர், கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக விஜய் நடிக்க உள்ள அடுத்தடுத்து படங்கள் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது. கோட் படத்தை முடித்துவிட்டு அரசியலில் கவனம் செலுத்தவிருக்கும் விஜய் அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Also read… Cinema Rewind: என்னையே வில்லனாக்குறியா? அர்ஜூன் கேள்வியால் பம்மிய விஷால்!

கார்களின் மீது ஆர்வம் கொண்ட விஜய்யிடம் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற உயர் ரக கார்கள் உள்ளன. இந்நிலையில் Lexus LM என்ற புதிய சொகுசு காரை விஜய் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் மதிப்பு ரூ. 2.50 கோடி என்று கூறப்படுகின்றது. டொயோட்டா நிறுவனத்தினுடையதே இந்த லெக்சஸ், டொயோட்டா நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு கார்களை லெக்சஸ் பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த லெக்சஸ் எல்எம் 350எச் எம்பிவி காரானது 7 சீட்டர் விஐபி (LM 350h 7-Seater VIP) மற்றும் 4 சீட்டர் அல்ட்ரா லக்சுரி (LM 350h 4-Seater Ultra Luxury) என இரண்டு வேரியண்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 4 சீட்டர் வேரியண்ட் தான் அதிக சொகுசானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 சீட்டர் வேரியண்டில் முன்வரிசை இருக்கைகளையும், பின்வரிசை இருக்கைகளையும் பிரிக்கும் வகையில் ஒரு தடுப்பு இடம்பெற்றுள்ளது. இந்தத் தடுப்பானது பின்வரிசை இருக்கையில் இருப்பவர்களுக்கு தனிமையுடன் கூடிய சொகுசு பயண அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் எம்பிவி கார்களிலேயே மிகவும் பாதுகாப்பான எம்பிவி கார் என இதனைச் சொல்லலாம் என்றும் கூறப்படுகின்றது.

Latest News