5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பட்டா இருந்த எனது கட்டடத்தை எந்தவித அறிவிப்புமின்றி இடித்துள்ளார்கள் – நாகர்ஜுனா வேதனை

Nagarjuna Akkineni: நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான N-Convention மையத்தை ஹைதாராபாத் பேரிடர் மேலாண்மை முகமை இடித்தது. மாதப்பூரில் உள்ள இந்த அரங்கு 27 ஆயிரம் சதுர அடியில், 3000 பேர் அமரக் கூடிய வகையில் நிறுவப்பட்ட ஒரு பிரம்மாண்ட அரங்காகும். இதனுள் மொத்தம் மூன்று கல்யாண மண்டபங்களும் அதற்கு ஏற்ற பார்க்கிங் ஏரியாவும் இருந்தது. இந்த கட்டிடத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், குடும்ப விழாக்கள் மட்டும் இல்லாமல் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளும் நடந்துவந்துள்ளது.

பட்டா இருந்த எனது கட்டடத்தை எந்தவித அறிவிப்புமின்றி இடித்துள்ளார்கள் – நாகர்ஜுனா வேதனை
நாகர்ஜுனா வேதனை
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Aug 2024 18:29 PM

பட்டா இருநதும் எனது கட்டடத்தை எந்தவித அறிவிப்புமின்றி இடித்துள்ளார்கள் என நடிகர் நாகர்ஜுனா வேதனை தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடத்தை அதிகாரிகள் இன்று அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி இடித்தனர். ஹைதராபாத்தில் உள்ள மாதாப்பூர் என்ற பகுதியில் தம்மிடி குந்தா என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் என் கன்வின்சன் என்ற பெயரில் அரங்கம் ஒன்றை நடிகர் நாகர்ஜுனா கட்டியிருந்தார். இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ள இடத்தில் சுமார் 3.5 ஏக்கர் தம்மிடி குந்தா ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக எழுந்த புகாரில் அடிப்படையில் அந்த கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் நாகர்ஜூனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா,  நடிகர் என்பதை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒரு தொகுப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘குபேரன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடித்து வருகிறார்.

நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான N-Convention மையத்தை ஹைதாராபாத் பேரிடர் மேலாண்மை முகமை இடித்தது. மாதப்பூரில் உள்ள இந்த அரங்கு 27 ஆயிரம் சதுர அடியில், 3000 பேர் அமரக் கூடிய வகையில் நிறுவப்பட்ட ஒரு பிரம்மாண்ட அரங்காகும். இதனுள் மொத்தம் மூன்று கல்யாண மண்டபங்களும் அதற்கு ஏற்ற பார்க்கிங் ஏரியாவும் இருந்தது. இந்த கட்டிடத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், குடும்ப விழாக்கள் மட்டும் இல்லாமல் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளும் நடந்துவந்துள்ளது. இவை அனைத்தும் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களின் வீட்டு விஷேசங்கள் நடைபெற்று வந்தது.

Also read… நடிகை கீர்த்தி சுரேஷின் முதல் சம்பளம் இவ்வளவா? இணையத்தை கலக்கும் தகவல்!

இந்த கன்வென்ஷன் ஹால் இருக்கும் 6.69 ஏக்கர் பரப்பளவில், சுமார் 3.30 ஏக்கர் வரை தம்பிடி குந்தா ஏரி நிலப்பரப்பை ஆக்கிரமித்து கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கினர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “N-Convention அரங்கு சட்டவிரோதமான முறையில் இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். எனது நற்பெயரைப் பாதுகாப்பதற்காகவும், சட்டத்தை மீறி நாங்கள் எந்தச் செயலையும் செய்யவில்லை என்பதை தெரிவிக்கும் வகையிலும் சில உண்மைகளை பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த நிலம் பட்டா நிலம். ஒரு அங்குல நிலம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை. தனியார் நிலத்தின் உள்ளே கட்டப்பட்ட அந்த கட்டிடத்தை இடிக்க சட்டவிரோதமான முறையில் நோட்டீஸ் பிறப்பிக்க தடை உத்தரவு உள்ளது. ஆனால், தவறான தகவலின் அடிப்படையில் இன்று அந்த கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

Latest News