5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

OTT Movies: ராயன் முதல் கல்கி வரை… இந்த வாரம் ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்!

Watch to Watch: தியேட்டரில் வெளியாகும் புதுப் படங்கள் வெளியாகி 4 முதல் 6 வாரங்களிலேயே தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது. இதனால் ரசிகர்கள் தாங்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய படங்களை வீட்டில் இருந்தே பார்த்து மகிழ்கின்றனர். கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்த வாரம் படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றது.

OTT Movies: ராயன் முதல் கல்கி வரை… இந்த வாரம் ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்!
ராயன்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Aug 2024 20:44 PM

தனுஷ் தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என பலர் நடித்துள்ளனர். படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘கல்கி 2898 ஏ.டி’. இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி, திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

இயக்குனர் பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜமா. இப்படத்தில் பாரி இளவழகன், சேத்தன், அம்மு அபிராமி என பல பிரபலங்கள் நடிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

உணர்வுகள் தொடர்கதை இயக்குனர் பாலு சர்மா இயக்கத்தில் ஹ்ரிஷிகேஷ், ஷெர்லின் செத் நடிக்கும் காதல் திரைப்படம். இந்தப் படம் தற்போது ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

குஞ்சாக்கோ போபன், சுராஸ் வெம்முடு நடிப்பில் வெளியான கிர்ர்ர் படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஸ்வகர்யம் சம்பவ பலம் என்ற திரில்லர் திரைப்படத்தை நசீர் பதருதீன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜியோ பேபி, அன்னு ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தற்போது மனோரமா மேக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ரோனி டேவிட் மற்றும் வின்சி அலோசியஸ் நடிப்பில் உருவான படம் பழஞ்சன் பிராணாயாமம். பினேஷ் கலரிக்கால் இயக்கியுள்ள இந்தப் படம் தற்போது சாய்னா ப்ளே ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Latest News