5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் விடாமுயற்சி படக்குழு… அடுத்த அப்டேட் இதோ!

Vidaamuyarchi Movie Update: படம் தீபாவளி ரிலீசுக்கு திட்டமிடப்பட்டு வருவதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனை அஜித் ரசிகர்கள் ’தல’ தீபாவளி இந்த வருடம் என்று சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர். இப்படத்தின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அர்ஜுனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் விடாமுயற்சி படக்குழு… அடுத்த அப்டேட் இதோ!
விடாமுயற்சி
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Aug 2024 07:26 AM

விடாமுயற்சி படக்குழுவின் அடுத்த அடுத்த அப்டேட்களால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி உள்ளனர். நடிகர் அஜித், துணிவு படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு 70 முதல் 80 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு மாத காலம் அசர்பைஜானில் நடத்தப்பட உள்ள நிலையில் கடந்த மாதம் இறுதியில் அஜித், அசர்பைஜான் புறப்பட்டு சென்றார். சமீபத்தில் அஜர்பைஜானில் நடந்துவந்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு தெரிவித்தது.

நடிகர் அஜித்குமார் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி என அடுத்தடுத்த இரு படங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு அசர்பைஜானில் துவங்கப்பட்டு சில மாதங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

Also read… Bigg Boss Tamil : பிக் பாஸ் அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா? கமல் இடத்துக்கு அடிபடும் புது பெயர்கள்.. வெளியான தகவல்!

இந்நிலையில் இந்த படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் சமீபத்தில் வெளியானது. ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்ட அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மைத்ரீ மூவி மேக்கர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்றது. ஒரு மாதம் நடந்த அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் நிறைவடைந்தது.

படம் தீபாவளி ரிலீசுக்கு திட்டமிடப்பட்டு வருவதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனை அஜித் ரசிகர்கள் ’தல’ தீபாவளி இந்த வருடம் என்று சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர். இப்படத்தின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அர்ஜுனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில், சுரேஷ் சந்திரா மற்றும் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரெடக்‌ஷன்ஸின் எக்ஸ் பக்கத்தில், விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள நடிகர் அரோவ் உள்ள போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜித், த்ரிஷா மற்றும் அர்ஜுன் ஆகியோரின் போஸ்டர்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆரோவின் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Latest News