5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Independence Day 2024: மெட்ராஸ் டூ தெலங்கானா.. மாநிலங்கள் உருவான வரலாறு.. சுதந்திரத்திற்கு பிறகு நடந்தது இதுதான்!

சுதந்திர தினம் 2024: இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 500க்கும் மேற்பட்ட மன்னர் மாகாணங்களில் ஜம்மு காஷ்மீர், ஹைதராபாத் உள்ளிட்ட மாகாணங்கள் இந்தியாவுடன் சேர்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், சில காலங்களுக்கு பிறகு இணைக்கப்பட்டது. தொடக்கத்தில் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மொழிவாரியாக உருவாக்கப்படவில்லை. அரசியல் மற்றும் வரலாற்று அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

Independence Day 2024: மெட்ராஸ் டூ தெலங்கானா.. மாநிலங்கள் உருவான வரலாறு.. சுதந்திரத்திற்கு பிறகு  நடந்தது இதுதான்!
சுதந்திர தினம் 2024
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Aug 2024 08:57 AM

சுதந்திர தினம்: மன்னராட்சியால் சிதறிக்கிடந்த சிறு சிறு நாடுகளை தன் ராணுவ பலத்தால், வெள்ளையர்கள் ஒருங்கிணைத்து ஆட்சி செய்து வந்தனர். கி.பி.1880ஆம் ஆண்டு காலத்தில் தென் தமிழ்நாட்டில் மருது சகோதர்களால் எதிர்க்கப்பட்டது தொடங்கி 1942ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை வெள்ளையரின் ஆட்சிக் கட்டுப்பாட்டில் இருந்த இப்போதைய இந்தியா, பல்வேறு வீரர்கள், தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்களின் தியாகத்தாலும், போராட்டத்தாலம் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. இப்படியான சூழலில், சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா எப்படி பல்வேறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது? அதன் வரலாறு என்ன என்பதை பார்ப்போம்.

மாநிலங்கள் பிரிக்கப்பட்ட வரலாறு:

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 500க்கும் மேற்பட்ட மன்னர் மாகாணங்களில் ஜம்மு காஷ்மீர், ஹைதராபாத் உள்ளிட்ட மாகாணங்கள் இந்தியாவுடன் சேர்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், சில காலங்களுக்கு பிறகு இணைக்கப்பட்டது. தொடக்கத்தில் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மொழிவாரியாக உருவாக்கப்படவில்லை. அரசியல் மற்றும் வரலாற்று அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. சில காலத்திற்கு பிறகு பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவை மொழி வாரியாக அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இதன் விளைவாக பல குழுக்கள் உருவாக்கப்பட்டு, சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் இந்தியாவில் மாநில உருவாக்கம் அமைந்தது.

Also Read: சோக கடலில் வயநாடு.. 350-ஐ தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை.. தொடரும் மீட்புப் பணிகள்!

மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள் என்னென்ன?

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் சென்னை மாகாணத்தில் இருந்த தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் பகுதிகளில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் சென்னை மாநிலமாக இருந்தது. இதற்கிடையில் 1950ஆம் ஆண்டு பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு என தனியாக ஆந்திர மாநிலத்தை உருவாக்கி தர வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார். அரசு செவிசாய்க்காத நிலையில் 1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு டிசம்பர் 15ஆம் தேதி அவரது மரணத்தோடு போராட்டம் நிறைவடைந்தது. இதனால் போராட்டம் வெடித்தது. மெட்ராஸ் மாகாணமே பற்றி ஏரிந்தது. இதன்பின், சுந்திர இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக அக்டோபர் 1953ஆம் ஆண்டு பிறந்தது ஆந்திர மாநிலம். இதனுடன் ஹைதராபாத், தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளும் இணைக்கப்பட்டன.

1956ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாநிலம் மத்திய பிரதேசம். திருவாங்கூர், கொச்சி, மலபார் ஆகிய பகுதிகளை இணைத்து 1956ஆம் ஆண்டு கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. கன்னட மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளை இணைத்து மைசூர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இதன் பெயர் 1973ஆம் ஆண்டு இதற்கு கர்நாடகா என பெயர் மாற்றப்பட்டது. 1966ஆம் ஆண்டு பாம்பை மாகாணத்தில் இருந்த பகுதிகளை பிரித்து மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 2 மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. அசாம் மாநிலத்தில் இருந்து சில பகுதியை பிரித்து 1963ஆம் ஆண்டு நாகலாந்து உருவாக்கப்பட்டது.

பட்டியாலா சமஸ்தானமும் இதர பகுதிகளையும் இணைத்து பஞ்சாப் மாநிலம் உருவாக்கப்பட்டது. பஞ்சாபில் இருந்து சில பகுதிகளை பிரித்து ஹரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இரண்டுக்கும் தலைநகராக சண்டிகர் உள்ளது. மதராஸ் மாகாணத்தில் இருந்து மெட்ராஸ் மாநிலம் உருவானது. கடந்த 1969ஆம் ஆண்டு இதற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது. 30 சமஸ்தானங்களை இணைத்து இமாச்சல பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது. இதற்கு முழு மாநில அந்தஸ்து 1971ஆம் ஆண்டு கிடைத்தது.

Also Read: ”எனது வீட்டில் ED ரெய்டு நடக்கும்” பகீர் தகவல் சொன்ன ராகுல் காந்தி!

சுதந்திரத்திற்கு பிறகும் போர்ச்சுகீஸ் காலணியாக இருந்து வந்த கோவாவை ராணுவ நடவடிக்கை மூலம் 1961ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு இதற்கு முழு மாநில அந்தஸ்து கிடைத்தது. மத்திய பிரசேதத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து கடந்த 2000ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. பீகாரில் பழங்குடிகள் அதிக வசிக்கும் பகுதிகளை பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உத்தராஞ்சல் உருவாக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு உத்தரகாண்ட் என பெயர் மாற்றப்பட்டது. 2014ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து சில பகுதிகளை பிரித்து தெலங்கானா உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest News