5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vegetables: காய்கறிகள் எப்படி எடுத்து கொள்வது நல்லது..? வேகவைத்தா..? பச்சையாகவா..? இங்கே அறியவும்!

Health Tips: கேரட் போன்று எல்லா காய்கறிகளை சாப்பிட முடியாது. ஏனெனில் காய்கறிகள் சமைத்த பின்னரே மென்மையாகவும், சுவையாகவும் மாறும். சமைக்கும்போது காய்கறிகளுக்குள் இருக்கும் செல்லுலார் அமைப்பு உடைகிறது. இது உடையும் போதுதான் காய்கறிகள் உடலில் எளிதில் ஜீரணம் ஆகும். காய்கறிகளை சமைப்பது வைட்டமின் சி போன்ற கூறுகளை அழிக்கிறது என்று பலர் கூறி கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால், சில காய்கறிகளை பச்சையாகும், சிலவற்றை சமைத்தும் சாப்பிடலாம்.

Vegetables: காய்கறிகள் எப்படி எடுத்து கொள்வது நல்லது..? வேகவைத்தா..? பச்சையாகவா..? இங்கே அறியவும்!
காய்கறிகள் (Image: freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 22 Sep 2024 20:50 PM

காய்கறிகள் உடலுக்கு பல நன்மைகளை தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கஇகளில் இருந்து உடலுக்கு ஏராளமான வைட்டமின்கள், இரும்புச்சத்துகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் நம் உடலுக்கு பல வகையில் நன்மைகளை தருகிறது. பச்சை மற்றும் வேகவைத்த காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை வெளியேற்றுகிறது. அந்தவகையில், இன்று வேகவைத்த உணவுகள் உடலுக்கு நன்மை தருமா அல்லது பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு நன்மை தருமா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

பச்சை காய்கறியை சாப்பிடலாமா..?

கேரட் போன்று எல்லா காய்கறிகளை சாப்பிட முடியாது. ஏனெனில் காய்கறிகள் சமைத்த பின்னரே மென்மையாகவும், சுவையாகவும் மாறும். சமைக்கும்போது காய்கறிகளுக்குள் இருக்கும் செல்லுலார் அமைப்பு உடைகிறது. இது உடையும் போதுதான் காய்கறிகள் உடலில் எளிதில் ஜீரணம் ஆகும். காய்கறிகளை சமைப்பது வைட்டமின் சி போன்ற கூறுகளை அழிக்கிறது என்று பலர் கூறி கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால், சில காய்கறிகளை பச்சையாகும், சிலவற்றை சமைத்தும் சாப்பிடலாம். அந்தவகையில் இரண்டு வகையான காய்கறிகளையும் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இருப்பினும், இவை காய்கறிகளின் வகையை பொறுத்தது.

ALSO READ: Healthy Tips: வைட்டமின் ‘டி’ குறைபாட்டால் இத்தனை ஆபத்தா? அதிகரிக்கச் செய்ய வழிகள் என்ன?

சமைத்த காய்கறிகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

  • வேகவைத்த அல்லது சமைத்த காய்கறிகளை சாப்பிடுவது உடலில் எளிதில் ஜூரணமாக உதவி செய்யும்.
  • வேகவைத்த காய்கறிகள் மிக குறைந்த கலோரிகளை பெற்று இருக்கு. இவற்றை சாப்பிடுவது எடை குறைக்க உதவி செய்வது மட்டுமின்றி, உடலில் பருமன் ஏறாமல் தடுக்கவும் உதவுகிறது.
  • காய்கறிகளை சமைக்கும்போது, அதில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். இதன் காரணமாக, வயிற்று தொற்று மற்றும் பாக்டீரியா சேதத்தை ஏற்படாமல் தடுக்கும்.
  • சமைத்த காய்கறிகள் சாப்பிடுவதால் அசிடிட்டி, மலச்சிக்கல், வாய்வு போன்ற பிரச்சனைகளை தடுக்கும்.

பச்சை காய்கறிகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

  • பச்சை காய்கறிகளில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்பை பலப்படுத்த உதவி செய்கிறது. இது விரைவில் வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசியை கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்கிறது.
  • கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் பச்சை காய்கறொகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன்மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் பாதிப்பை தடுக்கும்.
  • பச்சையாக காய்கறிகளை சாப்பிடுவதால் உடல் எடை குறைக்க உதவி செய்கிறது. இது உங்கள் உடலுக்குள் இருக்கும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி எடை இழப்புக்கு உதவுகிறது.

ALSO READ: Health Tips: கர்ப்ப காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாதா..? இது குழந்தைக்கு தீங்கு தரும்!

உலகில் தற்போது அதிகமாக ஏற்படும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க சரியான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். அதேநேரத்தில், சில காய்கறிகளை வேகவைத்து சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் உதவியாக இருக்கும். அவை பின்வருமாறு:

வேகவைத்த காய்கறிகளில் கிடைக்கும் நன்மைகள்:

பசலை கீரை:

பசலை கீரையில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் கே போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. இது உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இதயத் தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

கேரட்:

கேரட்டை பொறுத்தவரை நீங்கள் சமைத்தும் சாப்பிடலாம், அப்படியேவும் சாப்பிடலாம். கேரட்டில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது.

பட்டாணி:

பட்டாணியில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் உள்ளன, இவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.

காலிஃபிளவர்:

காலிஃபிளவரில் வைட்டமின் சி, கே மற்றும் நார்ச்சத்து உள்ளது, இவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது உடலில் வீக்கத்தைக் குறைக்கவும், தமனிகளில் பிளேக் உருவாவதைத் தடுக்கவும் உதவுகிறது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News