5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadi Pooram: ஆடிப்பூரம் திருவிழாவுக்கு பேமஸான கோயில்கள் என்னென்ன தெரியுமா?

Aadi Masam: ஆடிப்பூரம் திருவிழா அனைத்து அம்மன் கோயில்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அம்மன் பூஜையில் வைக்கப்பட்டு கொடுக்கப்படும் வளையல்களை வாங்கி அணிந்தால் திருமண வரன், குழந்தை பேறு, தொழில் வளர்ச்சி ஆகியவை கிடைக்கும். இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் சில முக்கியமான கோயில்களில் ஆடிப்பூரம் திருவிழா கொண்டாடப்படுவது சிறப்பானதாகும்.

Aadi Pooram: ஆடிப்பூரம் திருவிழாவுக்கு பேமஸான கோயில்கள் என்னென்ன தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 06 Aug 2024 12:40 PM

ஆடிப்பூரம் திருவிழா: ஆடி மாதம் என்றாலே ஆன்மிக மாதம் என்ற பெயரும் உண்டு. அம்மனுக்கு உரிய மாதமாக கொண்டாடப்படும் இம்மாதத்தில் ஊரெங்கிலும் உள்ள கோயில்கள் அனைத்தும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஆடி செவ்வாய், வெள்ளி, அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடித்தபசு, ஆடிப்பூரம் என ஏகப்பட்ட ஸ்பெஷலான நாட்களும் இந்த மாதத்தில் வரும். இதில் ஆடிப்பூரம் விழாவில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடத்தப்படும். இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் இரவு 9.03 மணி வரை நட்சத்திரம் உள்ளது. ஆனால் பூரம் நட்சத்திரம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை 6.42 மணிக்கே தொடங்கி விடுகிறது. இந்த நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்து வழிபட்டால் நாம் நினைத்தது நடைபெறும் என்பது ஐதீகமாகும்.

இந்த ஆடிப்பூரம் திருவிழா அனைத்து அம்மன் கோயில்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அம்மன் பூஜையில் வைக்கப்பட்டு கொடுக்கப்படும் வளையல்களை வாங்கி அணிந்தால் திருமண வரன், குழந்தை பேறு, தொழில் வளர்ச்சி ஆகியவை கிடைக்கும். இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் சில முக்கியமான கோயில்களில் ஆடிப்பூரம் திருவிழா கொண்டாடப்படுவது சிறப்பானதாகும். அதனைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

இதையும் படிங்க: Aadi Pooram: ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவது ஏன் தெரியுமா?

திருநெல்வேலியில் கோயில் கொண்டிருக்கும் நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் 4ஆம் நாளில் காந்திமதி அம்மனுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடத்தப்படும். இதேபோல் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் கற்பகவல்லி அம்மனுக்கு ஆடிப்பூரம் அன்று சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதோடு, இரவு வளையல் அலங்காரமும் செய்யப்படும்.

மேலும் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா கொண்டாடப்படும்.அதேசமயம் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் அருள்பாலிக்கும் கமலாம்பாள், திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள், நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் நீலாயதாட்சி அம்பாளுக்கு 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறும்.

இதையும் படிங்க: Money Astrology: 6 ராசிக்கு பண யோகம்.. கிரகப்பெயர்ச்சியால் தீரும் பொருளாதார பிரச்னை..

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்குழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் திரிபுரசுந்தரி அம்மன் சுயம்பு வடிவானவர். இந்த அம்மன் எட்டுவிதமான வாசனைப் பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டது. அம்பாளுக்கு வருடத்தில் பங்குனி உத்திரம், நவராத்திரியில் வரும் நவமி திதி மற்றும் ஆடிப்பூரம் ஆகிய 3 நாட்கள் மட்டுமே முழுமையாக அபிஷேகம் நடத்தப்படும். வைணவ தலங்களில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறும். ஆண்டாள் அவதரித்த நாள் ஆடிப்பூரம் என கூறப்படுவதால் அந்தநாள் விமரிசையாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News