5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aavani Rasipalan: தனுசு முதல் மீன ராசி வரை.. ஆவணி மாத ராசிபலனை தெரிஞ்சுகோங்க!

Monthly Horoscope: தனுசு ராசிக்கு ஆவணி மாதம் முழுவதும் சனிபகவான் ஆதரவாக இருப்பதால் வருமானம் போதுமானதாக இருக்கும். ஆனால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மற்றவர்களிடம் கேட்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். எத்தகைய சூழல் வந்தாலும் கடன் வாங்காதீர்கள். சனிபகவான் பார்வை இருப்பதால் எத்தகைய இறக்கங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு உண்டாகாது.

Aavani Rasipalan: தனுசு முதல் மீன ராசி வரை.. ஆவணி மாத ராசிபலனை தெரிஞ்சுகோங்க!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 16 Aug 2024 16:15 PM

ஆவணி மாத ராசிபலன்: ஆவணி மாதம்  ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிறக்கும் நிலையில் செப்டம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலமும் 12 ராசிகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட போகிறது. தமிழ் மாதங்களில் 5வது மாதமான இம்மாதத்தில் ஆவணி அவிட்டம், ஆவணி ஞாயிற்றுக்கிழமை,  விநாயகர் சதுர்த்தி, ஆவணி மூலம், கோகுலாஷ்டமி என பல ஆன்மிக நிகழ்வுகள் நடக்கும். அதேசமயம் ஆவணி மாதத்தில் திரிகிரஹி யோகம் என அழைக்கப்படும் மூன்று கிரகங்கள் ஒன்றுகூடும் நிகழ்வும் நடைபெறுகிறது. நாம் ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ராசியிலும் என்னென்ன விஷயங்கள் நடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

Also Read: Aavani Rasipalan: மேஷம் முதல் கடகம் வரை.. ஆவணி மாத ராசிபலன்கள் இதோ!

தனுசு: இந்த ராசிக்கு ஆவணி மாதம் முழுவதும் சனிபகவான் ஆதரவாக இருப்பதால் வருமானம் போதுமானதாக இருக்கும். ஆனால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மற்றவர்களிடம் கேட்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். எத்தகைய சூழல் வந்தாலும் கடன் வாங்காதீர்கள். சனிபகவான் பார்வை இருப்பதால் எத்தகைய இறக்கங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு உண்டாகாது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். ஊதிய உயர்வு, உயர் பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை விஷயங்களில் புதிய முயற்சிகள் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில்துறையில் தனுசு ராசிக்காரர்களுக்கு இம்மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும் அதே வேளையில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது சிறந்தது. அரசியல் துறையில் இருப்பவர்கள் தங்கள் பேச்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் மந்த நிலையும் சோர்வும் ஏற்படலாம். விவசாயத்தில் எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகமாக இருக்கும். குடும்பம் மற்றும் பணியிடங்களில் பெண்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றியை கொடுக்கும்.

மகரம்: இந்த ராசிக்கு குரு, சுக்கிரன், புதன், ராகு ஆகிய நான்கு கிரகங்கள் ஆதரவாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு இருக்கும். வருமானம் திருப்திகரமாக அமையும். திருமண முயற்சிகள் நிறைவேறும். வக்கிரகதியில் சனி பகவான் இருப்பதால் அலைச்சல் அதிகமாக இருக்கும். பலருக்கு சொந்த வீடு அல்லது நிலம் வாங்கும் வாய்ப்பு அமையும். பணியிடங்களில் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பம் மற்றும் வெளியிடங்களில் வீண் வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும் தொழில்துறையில் இருப்பவர்களுக்கு சுக்கிரன், ராகு ஆகிய இரு கிரகங்களும்  சுப பலம் பெற்று விளங்குவதால் எதிர்பார்ப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் பணம் செலுத்தலாம். அரசியல் துறையில் தனுசு ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். விவசாயத்தில் எதிர்பார்த்ததை விட விளைச்சல் குறைவாகவே இருக்கும். குருவும் சூத்திரனும் சாதகமாக இருப்பதால் புதிய ஆபரணங்கள் உடைகள் வாங்கும் நிலை உண்டாகும் குடும்பத்தில் இருக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.

 

கும்பம்: இந்த ராசிக்கு சனிபகவான் வக்கிரகதியில் இருப்பதால் வரவுக்கேற்ற செலவு இருக்கும். எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்படலாம். நெருங்கிய உறவினர்களுடைய பிரச்சினைகள் உண்டாகும். திருமண முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அடிக்கடி வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படுவதோடு அலைச்சலும் அதிகரிக்கும். வீண் செலவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பணியிடங்களில் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அனுகூலமான பலன் இருக்காது. தொழில் துறையில் எதிர்பாராத நிதி நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்திய கூறு உள்ளது. அரசியல் துறையில் இருப்பவர்கள் சட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். சொந்த விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மாணவர்களுக்கு படிப்புகளில் ஆர்வம் குறையும். நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. விவசாயத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உண்டாகலாம். கும்ப ராசியினர் ஏழரைச் சனியின் இரண்டாவது பகுதியில் உள்ளதால் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.

மீனம்: இந்த ராசிக்கு ஆவணி மாதம் குறைந்த அளவிலான பலன்களே கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையின்மையும் வீண் கவலைகளும் உண்டாகும். எடுத்த முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். தேவை இல்லாமல் எங்கும் அலைய வேண்டாம். சனி பகவான் வக்கிரகதியில் இருப்பதால் ஆரோக்கியத்தில் பிரச்சினை உண்டாகும். எதிர்காலத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கும். ஏழரை சனி நடைபெறுவதால் வேலை பார்க்கும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அதிகாரியுடன் பழகும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். புதிதாக வேலைக்கு செய்பவர்கள் அந்த நிறுவனம் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்ட பின்பு சேருவதைப் பற்றி யோசிக்க வேண்டும். தொழில் விஷயத்தில் கவனமுடன் செயல்படா விட்டால் பணத்தை இழக்க வேண்டி வரும். அரசியல் துறையினர் இம்மாதத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும் . இல்லாவிட்டால் மக்கள் மற்றும் மேலிட செல்வாக்கை இழக்க வாய்ப்பு உள்ளது. படிப்பு விஷயத்தில் மாணவர்களுக்கு பின்னடைவு ஏற்படும். விவசாயத் துறையில் உழைப்பிற்கேற்ற விளைச்சல் இருக்கும். ஏழரை சனி நடைபெறுவதால் பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். கணவருடன் நானும் கருத்து வேறுபாடு ஏற்படலாம்

Latest News