5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Purattasi Saturday: ஏகாதசியுடன் வரும் புரட்டாசி சனிக்கிழமை.. என்ன செய்யலாம்?

அமாவாசை மற்றும் பௌர்ணமியில் இருந்து 11வது நாள் பொதுவாக ஏகாதசி திதி வரும். ஏகாதசி நாளே ஒரு பெண் தெய்வத்தை குறிப்பது தான். பகவான் விஷ்ணு அரிசியில் இருந்து ஒரு பெண்ணை உருவாக்கினார். அதற்கு பின்னாள் ஒரு கதையே உள்ளது. விஷ்ணுவின் வலது காதில் இருந்து வந்தவள் தான் ஏகாதசி என்ற பெண். அவள் அசுரனை வதம் செய்ய விஷ்ணுவுக்கு துணை நின்றாள். அவளை சிறப்பிக்கும் பொருட்டு ஏகாதசி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Purattasi Saturday: ஏகாதசியுடன் வரும் புரட்டாசி சனிக்கிழமை.. என்ன செய்யலாம்?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 26 Sep 2024 21:00 PM

புரட்டாசி சனிக்கிழமை: தமிழ் மாதங்களில் 6வது மாதமாக வருவது புரட்டாசி. இம்மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாகும். இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் எப்போதும் விசேஷமானது. நடப்பாண்டு புரட்டாசி மாதத்தில் 4 சனிக்கிழமைகள் வருகிறது. இன்றைய நாளில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் அந்த நாள் இரவில் பெருமாள் கோயிலில் கருட உற்சவம் நடைபெறும். இதனிடையே செப்டம்பர் 28 ஆம் தேதி வரும் புரட்டாசி 2வது சனிக்கிழமையில் ஏகாதசி திதி வருகிறது. ஏற்கனவே புரட்டாசி பெருமாளுக்குரிய மாதம், அம்மாதத்தில் வரும் சனிக்கிழமை மிகவும் விசேஷமானது. அப்படியிருக்கும் நிலையில் அதில் வரும் ஏகாதசி பெருமாளின் சிறப்பு தினமாகும். இந்த மூன்றும் ஒரே தினத்தில் வந்தால் கொண்டாட்டம் தான்.

Also Read: Special Buses: ஊருக்கு போற ப்ளான் இருக்கா? 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்து இயக்க திட்டம்.. முழு விவரம்..

அதைவிட சிறப்பான நாள் நிச்சயம் வெகு எளிதில் அமையாது. அமாவாசை மற்றும் பௌர்ணமியில் இருந்து 11வது நாள் பொதுவாக ஏகாதசி திதி வரும். ஏகாதசி நாளே ஒரு பெண் தெய்வத்தை குறிப்பது தான். பகவான் விஷ்ணு அரிசியில் இருந்து ஒரு பெண்ணை உருவாக்கினார். அதற்கு பின்னாள் ஒரு கதையே உள்ளது. விஷ்ணுவின் வலது காதில் இருந்து வந்தவள் தான் ஏகாதசி என்ற பெண். அவள் அசுரனை வதம் செய்ய விஷ்ணுவுக்கு துணை நின்றாள். அவளை சிறப்பிக்கும் பொருட்டு ஏகாதசி தினம் கடைபிடிக்கப்படுகிறது. சஷ்டி முருகனுக்கும், பஞ்சமி வராஹிக்கும், சதுர்த்தி விநாயகருக்கும், பிரதோஷம் சிவனுக்கும் உகந்ததோ அதேபோல் ஏகாதசி திதி பெருமாளுக்கு மிகவும் உகந்தது.

யார் ஒருவர் ஏகாதசி நாளில் மகாவிஷ்ணு நாமத்தை கூறி அரிசி உணவு சாப்பிடாமல் விரதம் இருக்கிறாரோ அவர் வைகுண்டத்திற்கு செல்வார் என விஷ்ணு புராணம் தெரிவிக்கிறது. வாழும்போது எவ்வளவுதான் பாவம் செய்தாலும் ஏகாதசி என்று விரதம் இருந்தால் நிச்சயம் மோட்சம் பெற்று வைகுண்டம் செல்வோம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் ஏகாதசி வரும். அந்த வகையில் புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை வரும் ஏகாதசி திதியில் பெருமாளை வழங்கினால் கண்டிப்பாக ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். எனவே பெருமாள் கோவிலுக்கு சென்று கருடனுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும்.

Also Read: IND vs BAN 2nd test Live Streaming: இந்தியா – வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்.. இந்த போட்டி எப்போது, எங்கு தொடங்குகிறது..?

பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்ட பின் தாயாரை கண்டிப்பாக வணங்க வேண்டும். தாயாருக்கு மஞ்சள் பொடி அல்லது பூ வாங்கி கொடுக்கலாம். அதன் பிறகு அக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். கருடனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நம்மை பிடித்த துன்பங்கள் எல்லாம் நீங்கி இன்பம் உண்டாகும். மேலும் நம்மை பிடித்த பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கும். அதுமட்டுமல்லாமல் வரக்கூடிய நாட்கள் அனைத்தும் ஆரோக்கியம் செழித்து ஓங்கும். புரட்டாசி சனிக்கிழமை வரும் ஏகாதசி நாளில் சக்கரத்தாழ்வாருக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் அதைவிட வாழ்க்கையில் பெரிய பாக்கியம் எதுவுமில்லை என சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது.

புரட்டாசி சனிக்கிழமையில் என்ன செய்யலாம், செய்யக்கூடாது?

  • புரட்டாசி சனிக்கிழமை அன்று எக்காரணம் கொண்டும் யாருக்கும் கடன் கொடுக்கவோ நாம் கடன் வாங்கவும் கூடாது. ஆனால் அன்றைய நாளில் அளவில்லாத தர்மம் செய்யலாம். புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் திருமணத்தடை, கிரக தோஷங்கள், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். மேலும் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைய தினத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து மனம் உருகி வழித்தடம் சனியால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News