5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Paris Olympics 2024: ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம்.. கெத்துகாட்டிய மனு – சரப்ஜோத் ஜோடி!

Olympics 2024: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு போட்டியில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், ஒரு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் படைத்தார். இதுவரை எந்த ஒரு இந்திய வீரரும் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றதில்லை. ஆனால், பல ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் உள்ளனர்.

Paris Olympics 2024: ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம்.. கெத்துகாட்டிய மனு – சரப்ஜோத் ஜோடி!
மனு பாக்கர் – சரப்ஜோத் சிங்
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 30 Jul 2024 13:57 PM

ஒலிம்பிக் பதக்கம்: பாரிஸ் ஒலிம்பில் 2024ல் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், இரண்டாவது பதக்கத்தை வென்று தற்போது மாபெரும் சாதனையை படைத்தார். இன்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் ஜோடி கொரியாவின் லீ வோன்ஹோ மற்றும் ஓ யே ஜின் ஜோடியை வீழ்த்தி இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கத்தை வென்று கொடுத்தது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மனு – சரப்ஜோத் ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரிய ஜோடியைத் தோற்கடித்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மனு பாக்கர் தனது பெயரில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Also read: Paris Olympics Day 3 Highlights: ஒலிம்பிக்கில் மீண்டும் மனு பாக்கர் முத்திரை.. கால் இறுதியில் பேட்மிண்டன் இந்திய ஜோடி.. 3ம் நாள் ஹைலைட்ஸ் இதோ!

ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர்:

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு போட்டியில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், ஒரு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் படைத்தார். இதுவரை எந்த ஒரு இந்திய வீரரும் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றதில்லை. ஆனால், பல ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் உள்ளனர். பாரிஸில் முதல் வெற்றிக்கு 48 மணி நேரத்திற்குப் பிறகு, மனு பாக்கர் மற்றொரு வெண்கலம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

வெற்றி எப்படி கிடைத்தது..?

மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜூலை 29ம் தேதியான நேற்று, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் வெண்கலப் பதக்கப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இருவரும் தகுதிச் சுற்றில் 20 முறை கச்சிதமாக சுட்டு அதன் மூலம் 580 புள்ளிகளைப் பெற்றனர். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கொரிய ஜோடியுடன் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி கடுமையாக போராடினார்கள். இந்தபோட்டியில் முதல் செட்டை கொரியா வென்று தொடங்கியது. இதன் பிறகு, மனு மற்றும் சரப்ஜோத் சிங் தொடர்ந்து 5 செட்களில் வெற்றி பெற்று அசத்தியது.

Also read: Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை தூக்கிய சீனா.. முதல் பதக்கம் வென்ற நாடு இதுவா..?

முதல் பதக்கத்தை எப்போது வென்றார் மனு பாக்கர்..?

பாரிஸ் ஒலிம்பிக்கின் இரண்டாவது நாளில் அதாவது ஜூலை 27 ஆம் தேதி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மனு பாகர் வெண்கலம் வென்றார். இந்தப் பதக்கத்தின் மூலம் இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற பெருமையை மனு பெற்றார். இப்போது ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்று புதிய வரலாறும் படைத்தார்.

Latest News