5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

SA-W vs NZ-W Final: தடுமாறிய தென்னாப்பிரிக்கா.. மகளிர் டி20 சாம்பியனான நியூசிலாந்து!

Women's T20 World Cup: 9வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், ஸ்காட்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றன. இதில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.

SA-W vs NZ-W Final: தடுமாறிய தென்னாப்பிரிக்கா.. மகளிர் டி20 சாம்பியனான நியூசிலாந்து!
வெற்றி கொண்டாட்டத்தில் நியூசிலாந்து மகளிர் அணியினர்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 20 Oct 2024 23:16 PM

மகளிர் டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. 9வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், ஸ்காட்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஏ பிரிவிலிருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவிலிருந்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும் முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

Also Read: Crime: ஆந்திராவில் கோர சம்பவம்.. திருமணம் செய்ய கேட்ட 16 வயது சிறுமி எரித்துக்கொலை!

இதில் முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதேபோல் நியூசிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இப்படியான நிலையில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி க முதலில் பேட் செய்த நியூசிலாந்து மகளிர் அணியில் இருந்து தொடக்க வீரர்களாக சுசி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் ஆகியோர் களம் கண்டனர். இவர்களில் ஜார்ஜியா 9 ரன்களில் அவுட்டாக, சுசி பேட்ஸ் 32 ரன்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து களம் கண்டு விளையாடிய அமலியா கெர் 43 ரன்களும், ப்ரூக் ஹாலிடே 38 ரன்களும் எடுக்க 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சைப் பொறுத்தவரை நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட்டுகளையும், அயபோங்கா காகா, நாடின் டி கிளார்க், சோலி ட்ரையான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

159 ரன்கள் எடுத்தால் சாம்பியன் என்ற இலக்குடன் களம் கண்ட தென்னாப்பிரிக்கா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து இலக்கை நோக்கி முன்னேறியது. ஆனால் நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் இலக்கை அடைய முடியாமல் தென்னாப்பிரிக்கா தடுமாறியது.

அந்த அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட் 33 ரன்களும், டாஸ்மின் பிரிட்ஸ் 17 ரன்களும், சோலி ட்ரையான் 14 ரன்களும், அன்னரி டெர்க்சன் 10 ரன்களும் அதிகப்பட்சமாக எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டானதால் 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அலிமயா கெர் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரோஸ்மேரி மெய்ர், ஈடன் கார்ஸன், ஃபிரான் ஜோனாஸ், ஃப்ரூக் ஹாலிடே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Also Read: IND vs NZ 1st Test: முடிவுக்கு வந்த 36 ஆண்டுகால வறட்சி.. இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைத்த நியூசிலாந்து!

இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 9வது டி20 உலகக்கோப்பையின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. இன்றைய ஆட்டத்தை 21,457 பேர் நேரில் பார்த்து ரசித்தனர். நியூசிலாந்து அணியில் 43 ரன்கள் விளாசிய அமெலியா கெர் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.  இதேபோல் 36 ஆண்டுகளுக்குப் பின் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து ஆடவர் அணி இன்று வெற்றி பெற்றிருந்தது. இப்படியாக நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News