5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cricket Stadium: கோவையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்.. சூப்பர் திட்டத்துடன் தமிழ்நாடு அரசு!

TN Govt: சென்னையில் உள்ள சேப்பாக்கம் (எம்.ஏ. சிதம்பரம்) ஸ்டேடியம் கடந்த 1916ம் ஆண்டு கட்டப்பட்டது. இது தவிர தமிழ்நாட்டில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படவில்லை. இப்போது தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பில் அதிநவீன வசதிகளுடன் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட திட்டமிட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் வருங்காலத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தை மிஞ்சும் வகையில் கோவையில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை எதிர்பார்க்கலாம்.

Cricket Stadium: கோவையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்..  சூப்பர் திட்டத்துடன் தமிழ்நாடு அரசு!
மாதிரிப்படம்
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 12 Aug 2024 08:07 AM

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்: உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர ஸ்டேடியம் இருக்கும்போது, இதை மிஞ்சும் வகையில் இன்னொரு பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட இருக்கிறது. அதுவும் இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் கட்டப்பட இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிப்பதற்கான டெண்டர்களை தமிழ்நாடு அரசு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய ஸ்டேடியம் கட்டும் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தற்போது, ​​அதன் முதல் கட்டமாக, ஸ்டேடியம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்த டெண்டருக்கு பிறகு முழு தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: IPL 2024: ஐபிஎல் 2025ல் மீண்டும் விளையாடப்போகும் தோனி! பிசிசிஐ பக்கா பிளான்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்த ஸ்டேடியம் எங்கு அமைய உள்ளது..?

கோயம்புத்தூர் நகரிலிருந்து 16 கி.மீ தொலைவில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலத்தையும் கொச்சியையும் இணைக்கும் NH 544 நெடுஞ்சாலைக்கு அருகில் இந்த ஸ்டேடியம் அமைய இருப்பது சிறப்பு வாய்ந்தது. மாநில சிறைத்துறைக்கு சொந்தமாக 200 ஏக்கர் நிலம் உள்ளது, அதில் 198 ஏக்கர் மைதானம் டிபிஆர் தயாரித்த பிறகு கையகப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட ஸ்டேடியம், இருக்கை வசதியில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தை விஞ்சும் என்பது மட்டுமின்றி, அதிநவீன அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் மற்றும் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியம் ஆகியவற்றை இந்த திட்டத்திற்கான முன் உதாரணமாக மேற்கோளிட்டுள்ளது. லண்டனில் உள்ள சின்னமான லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் வடிவமைப்பை போல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நரேந்திர மோடி ஸ்டேடியம்:

1,32,000 பேர் அமரும் திறன் கொண்ட நரேந்திர மோடி ஸ்டேடியம், உலக கிரிக்கெட் ஸ்டேடியங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அகமதாபாத்தில் இருந்த சர்தார் படேல் ஸ்டேடியத்தை கடந்த 2015ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதையடுத்து, 800 கோடி மதிப்பீட்டில் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்ட நரேந்திர மோடி ஸ்டேடியம், மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தை விட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மாறியது.

ALSO READ: Paris Olympics 2024: துப்பாக்கி சுடுதல் முதல் மல்யுத்தம் வரை… 2024 ஒலிம்பிக்கில் இந்தியாவின் சாதனை பயணம்!

இருக்கை வசதியின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்கள்:

  1. நரேந்திர மோடி ஸ்டேடியம், இந்தியா – 1,32,000
  2. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், ஆஸ்திரேலியா – 1,00,024
  3. ஈடன் கார்டன் ஸ்டேடியம், இந்தியா – 68,000
  4. ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், இந்தியா – 65,000
  5. பெர்த் ஸ்டேடியம், ஆஸ்திரேலியா – 61,266
  6. அடிலெய்டு ஓவல், ஆஸ்திரேலியா – 53,583
  7. கிரீன்ஃபீல்ட் சர்வதேச அரங்கம், இந்தியா – 50,000
  8. பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், இந்தியா – 50,000
  9. பிரபோர்ன் ஸ்டேடியம், இந்தியா – 50,000
  10. டாக்லாண்ட்ஸ் ஸ்டேடியம், ஆஸ்திரேலியா – 48,003

சென்னையில் உள்ள சேப்பாக்கம் (எம்.ஏ. சிதம்பரம்) ஸ்டேடியம் கடந்த 1916ம் ஆண்டு கட்டப்பட்டது. இது தவிர தமிழ்நாட்டில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படவில்லை. இப்போது தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பில் அதிநவீன வசதிகளுடன் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட திட்டமிட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் வருங்காலத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தை மிஞ்சும் வகையில் கோவையில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை எதிர்பார்க்கலாம்.

Latest News