5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Special Buses: ஊருக்கு போறீங்களா? இன்று முதல் 26 ஆம் தேதி வரை 958 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

ரயில் சேவைக்கு முன் பதிவு மற்றும் குறிப்பிட்ட இருக்கை/படுக்கை வசதிகள் மட்டுமே இருப்பதால் மக்கள் பேருந்து சேவையை தான் நம்பியுள்ளனர். மக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் கூடுதல் வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கி வருகிறது. மேலும் சொந்த ஊர்களுக்கு செல்ல விடுமுறை நாட்கள், முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது.

Special Buses: ஊருக்கு போறீங்களா? இன்று முதல் 26 ஆம் தேதி வரை 958 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 23 Aug 2024 19:10 PM

சிறப்பு பேருந்துகள்: வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாள் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வரும் காரணத்தால் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பெரிதும் நம்பி இருப்பது பேருந்து சேவை தான். ரயில் சேவைக்கு முன் பதிவு மற்றும் குறிப்பிட்ட இருக்கை/படுக்கை வசதிகள் மட்டுமே இருப்பதால் மக்கள் பேருந்து சேவையை தான் நம்பியுள்ளனர். மக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் கூடுதல் வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கி வருகிறது. மேலும் சொந்த ஊர்களுக்கு செல்ல விடுமுறை நாட்கள், முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது. இதனால் விசேஷ நாட்களில் மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் வார இறுதி நாட்கள் மற்றும் வரும் திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தி என்பதால் 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதனால் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பில் சிறப்பு பேருந்திகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், “ 23/08/2024 (வெள்ளிக் கிழமை முகூர்த்தம்) 24/08/2024 (சனிக்கிழமை), 25/08/2024 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 26/08/2024 அன்று கிருஷ்ணஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 23/08/2024 மற்றும் 24/08/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 1 ஆண்டுக்கு இலவச ரீசார்ஜ்.. ஜியோ நிறுவனம் அசத்தல் அறிவிப்பு.. முழு விவரம் இதோ!

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துகுடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 23/08/2024 (வெள்ளிக்கிழமை) மற்றும் 24/08/2024 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் 485 பேருந்துகளும், மற்றும் 25/08/2024(ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 26/08/2024 (திங்கள்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி அன்று கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23/08/2024 (வெள்ளிக் கிழமை மற்றும் 24/08/2024 (சனிக்கிழமை) அன்று 70 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 23/08/2024 24/08/2024 (சனிக்கிழமை ) அன்று 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News