5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Air Taxi: சூப்பர் அறிவிப்பு.. நெய்வேலி – சென்னை இடையே ஏர் டேக்ஸி சேவை.. எப்போது ?

மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், கடலூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., எம்.கே.விஷ்ணு பிரசாத்துக்கு எழுதிய கடிதத்தில். பிராந்திய இணைப்புத் திட்டத்தின் (ஆர்.சி.எஸ்.,) கீழ், நெய்வேலி - சென்னை விமானங்களின் வணிகச் செயல்பாடுகள், ஒன்பது இருக்கைகள் கொண்ட ஏர் டேக்ஸி, நெய்வேலி விமான நிலைய பணிகள் முடிவடைந்த பின் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Air Taxi: சூப்பர் அறிவிப்பு.. நெய்வேலி – சென்னை இடையே ஏர் டேக்ஸி சேவை.. எப்போது ?
கோப்பு புகைப்படம் (image courtesy: pixabay)
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 04 Sep 2024 12:00 PM

சென்னை நெய்வேலி இடைடே ஏர் டேக்ஸி: மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் நெய்வேலி விமான நிலையத்திஆலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வணிகரீதியான விமான சேவைகள் தொடங்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், கடலூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., எம்.கே.விஷ்ணு பிரசாத்துக்கு எழுதிய கடிதத்தில். பிராந்திய இணைப்புத் திட்டத்தின் (ஆர்.சி.எஸ்.,) கீழ், நெய்வேலி – சென்னை விமானங்களின் வணிகச் செயல்பாடுகள், ஒன்பது இருக்கைகள் கொண்ட ஏர் டேக்ஸி, நெய்வேலி விமான நிலைய பணிகள் முடிவடைந்த பின் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி விமான நிலையம், நிலக்கரி அமைச்சகத்தின் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனுக்கு (என்எல்சி) சொந்தமானது, உடான் திட்டத்தின் கீழ் ஆர்சிஎஸ் விமானங்களின் மேம்பாடு மற்றும் செயல்பாடுகளுக்காக அடையாளம் காணப்பட்டது.

Also Read: மனுக்களை மாலையாக அணிந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு உருண்டு வந்த நபர்.. விரக்தியின் உச்சம்..

இத்திட்டத்தின் கீழ், விமான நிலைய வளர்ச்சிக்கு, 15.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன் வரை, 14.98 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தை இயக்குவதற்கு முன், டிஜிசிஏ ஆய்வு மற்றும் உரிமம் வழங்கப்பட வேண்டும். “நெய்வேலி விமான நிலையம் தற்போது சிறிய விமானங்களுக்கு சேவை செய்யும் வான்வழி மதிப்பாய்வு சான்றிதழ் (ARC) 2B வகைக்காக உருவாக்கப்பட்டு வருகிறது. எவ்வாறாயினும், ஏடிஆர் விமான நடவடிக்கைகளுக்காக விமான நிலையத்தை மேம்படுத்துவது என்எல்சிக்கு சொந்தமானது, அது விமான நிலையத்தின் உரிமையாளராக உள்ளது,”என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய எம்பி விஷ்ணு பிரசாத், “கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு, நெய்வேலி விமான நிலையம் வணிக ரீதியாக செயல்பட்டு வந்தது. நம்பகத்தன்மை மற்றும் லாபம் இல்லாத காரணத்தால் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. ஜூன் மாதம் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கிஞ்சராபுவை நான் சந்தித்த பிறகு, இந்த முன்மொழிவு பரிந்துரைக்கப்பட்டு, நெய்வேலியில் இருந்து சென்னைக்கு ஒன்பது இருக்கைகள் கொண்ட விமானத்திற்கான அனுமதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Also Read: 1 ஆண்டுக்கான FD திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு விமான நிறுவனம் இந்தச் செயல்பாட்டை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அமைச்சகம் விமான நிலையத்தின் தயார்நிலையைக் கேட்டுள்ளது மற்றும் பாதுகாப்பை மேற்கொள்ள தமிழக அரசைக் கோரியுள்ளது. இது ஒப்புக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. எனவே, விரைவில் இந்த பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது.” என்றார்.

Latest News