5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kumbakonam: காவல் நிலையம் கட்ட ரூ.2 கோடி நிலத்தை இலவசமாக கொடுத்த தொழிலதிபர்!

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏரியா ரீதியாக காவல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் இவற்றில் கால்பங்கு காவல் நிலையங்கள் வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு முடிந்தவரை அனைத்து காவல் நிலையங்களையும் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கான நடவடிக்கைகளையும் ஒருபுறம் மேற்கொண்டு வருகிறது.

Kumbakonam: காவல் நிலையம் கட்ட ரூ.2 கோடி நிலத்தை இலவசமாக கொடுத்த தொழிலதிபர்!
இலவசமாக நிலம் வழங்கிய ஷாஜகான்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 06 Sep 2024 16:20 PM

கும்பகோணம் அருகே காவல் நிலையம் கட்டுவதற்காக தொழிலதிபர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக அளித்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏரியா ரீதியாக காவல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் இவற்றில் கால்பங்கு காவல் நிலையங்கள் வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு முடிந்தவரை அனைத்து காவல் நிலையங்களையும் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கான நடவடிக்கைகளையும் ஒருபுறம் மேற்கொண்டு வருகிறது. இப்படியான நிலையில் கும்பகோணம் அருகே காவல் நிலையம் கட்ட ரூபாய் 2 கோடி மதிப்பிலான நிலத்தை தொழிலதிபர் இலவசமாக வழங்கியுள்ளார்.

Also Read: Job Astrology : நல்லது செய்யும் சனி.. இந்த 4 ராசிக்கு தேடி வரும் வேலைவாய்ப்பு!

கும்பகோணம் தாலுகா காவல் நிலைய சரகத்துக்குள் இருந்த சோழபுரம் தனியாக பிரிக்கப்பட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி திருப்பனந்தாள் காவல் நிலைய சரகத்துக்குள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து சோழபுரம் புதிய காவல் நிலையம் தொடங்கப்பட்டது. இந்த காவல் நிலையம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இப்படியான நிலையில் காவல் நிலையத்துக்கு சொந்தமாக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து அதற்கான இடத்தை தேடும் பணியும் மும்முரமாக நடந்து வந்தது. ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சோழபுரத்தை சேர்ந்த ஷாஜகான் என்ற 68 வயது நபர் பொதுமக்களின் நலன் கருதி காவல் நிலையத்திற்கு தனது இடத்தை கொடுக்க வந்தார். அதன்படி அருகில் உள்ள தனது 20,000 சதுர அடி பரப்புள்ள நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பு  சுமார் ரூபாய் 2 கோடி ஆகும்.

Also Read: Rajma Benefits : இதயம் முதல் நீரிழிவு வரை.. கிட்னி பீன்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு தீர்வுகளா?

அந்த இடத்தை நேற்று திருவிடைமருதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோழபுரம் காவல் நிலையத்தின் பெயரில் பத்திரப்பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பத்திரப்பதிவு முடிந்ததும் ஷாஜகான் அதற்கான பத்திரத்தை திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜிகே ராஜு, திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கரிகாலச் சோழன் ஆகியோரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்துக்கு ரூபாய் 2 கோடி மதிப்பிலான தனக்கு சொந்தமான இடத்தை இலவசமாக கொடுத்த ஷாஜகானுக்கு காவல்துறையினர் மட்டும் இன்றி சமூக அமைப்பினரும் பொது மக்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

Latest News