5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Powercut: சென்னையில் இன்று 5 மணி நேர மின் தடை.. எங்கே தெரியுமா? லிஸ்ட் இதோ..

தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது.

Chennai Powercut: சென்னையில் இன்று 5 மணி நேர மின் தடை.. எங்கே தெரியுமா? லிஸ்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 26 Sep 2024 07:26 AM

சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி சிட்கோ – திருமுல்லைவாயல், பெரியார் நகர் மற்றும் தில்லை கங்கை நகர் ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் சாதனங்கள் பயன்படுத்த முடியாது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது.

இதையும் படிங்க : பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் புகார்.. இளம் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

மின்தடை:

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :  பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? – என்னென்ன விதிமுறைகள் தெரியுமா?

வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் செபடம்பர் 26 ஆம் தேதியான இன்று, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி,சிட்கோ – திருமுல்லைவாயல், பெரியார் நகர் மற்றும் தில்லை கங்கை நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

சென்னையில் எங்கே மின் தடை? 

சிட்கோ – திருமுல்லைவாயல் :

சிட்கோ திருமுல்லைவாயல் பகுதியில் எல்லம்பேட்டை, அம்பேத்கர் நகர், அன்னை இந்திரா நினைவு நகர், வீரபாண்டி நகர், நாகாத்தம்மன் நகர், இ.ஜி.நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

பெரியார் நகர் :

பெரியார் நகர் பகுதியில் எஸ்ஆர்பி கோயில் தெற்கு & வடக்கு தெரு, ஜிகேஎம் காலனி மற்றும் பெரியார் நகர் அனைத்து தெருக்கள், வெங்கட்ராமன் சாலை, ஜெகநாதன் சாலை, ஜவஹர் நகர், ஜவஹர் நகர் வட்ட சாலை, லோகோ திட்டம், லோகோ ஒர்க்ஸ் சாலை, கார்த்திகேயன் சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க : Tirupati Laddu : ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போர்டு புகார்.. நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்ததாக புகார்!

தில்லை கங்கா நகர் :

தில்லை கங்கா நகர் பகுதியில் சக்தி நகர், பாலாஜி நகர் 1 முதல் 15வது தெருக்கள், நேதாஜி காலனி 5 முதல் 9வது தெருக்கள், ஏஜிஎஸ் காலனி, வேல் நகர், தாமரை தெரு, நவீன் பிளாட்ஸ், நேதாஜி காலனி மெயின் ரோடு, எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

Latest News