5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chidambaram Accident: கார் – லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சோகம்..

உடல் நலக்குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்துவிட்டு திரும்பிய போது இந்த கோர விபத்து நடந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பூந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் இதயத்துல்லா. துபாயில் இருந்த இவர் உடல்நலக் குறைவால் சென்னை கொண்டு வரப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Chidambaram Accident: கார் – லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சோகம்..
கோப்பு புகைப்படம் (pic courtesy: pixabay)
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 12 Sep 2024 11:14 AM

சிதம்பரம் விபத்து: சிதம்பரம் அருகே கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை, பெண்கள் உள்பட 5 பேர் பரிதாப உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலக்குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்துவிட்டு திரும்பிய போது இந்த கோர விபத்து நடந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பூந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் இதயத்துல்லா. துபாயில் இருந்த இவர் உடல்நலக் குறைவால் சென்னை கொண்டு வரப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை பார்ப்பதற்காக இவரது மைத்துனரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முகமது அன்வர் (வயது 56) தனது உறவினர்களுடன் ஒரு காரில் சென்றுள்ளார்.

இவர்கள் சென்னை சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரை பார்த்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்த காரை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த யாசர்அராபத் (40) ஒட்டி வந்துள்ளார். அந்த காரில் முகமது அன்வர், அவர்களது உறவினர்களான அதே கிராமத்தைச் சேர்ந்த ஹாஜிதாபேகம் (வயது 62), திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஹரபத் நிஷா (வயது 30) அவரது 3 வயது குழந்தை அப்னான் ஆகியோர் காரில் பயணம் செய்தனர்.

இந்த கார் இன்று அதிகாலை பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூர் மேம்பாலம் அருகே வந்தபோது எதிரே சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி சென்ற லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரும் அடுத்தடுத்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படிக்க: மதுரை பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து.. 2 பேர் உயிரிழந்த சோகம்..

இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்ததும் லாரியை விட்டு, டிரைவர் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.

மேலும் படிக்க: தோனி ஓய்வா? ரிஷப் பண்ட் மீது கண் வைத்த சிஎஸ்கே.. கெய்க்வாட் கேப்டன் இல்லையா?

விபத்து நடந்த மேம்பாலம் ஒரு வழிப்பாதையாக செயல்பட்டு வருகிறது. பாலத்தில் ஒருபுறம் சாலை அமைக்கப்படாததால் ஒரே வழிப்பாதையில் இருபுறமும் வாகனங்கள் சென்று வருகிறது. அந்த இடத்தில் போதிய எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புக் கட்டைகள் வைக்காததால்தான் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த உடன் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அவசர அவசரமாக வந்து சாலையை பிரித்து தடுப்புக் கட்டைகளை வைத்தனர்.

இதேபோல் கடந்த வாரம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அடுத்த செம்மஞ்சேரி மீனவ பகுதி சாலையில் சென்னையை நோக்கி வந்த ஈச்சர் லோடு லாரி செண்டர் சாப்ட் கட்டாகி பழுதான நிலையில் நின்றுள்ளது, அதே மார்கத்தில் வந்த ஹோண்டா சிட்டி கார் அதிவேகமாக வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கம் மோதி விபத்து ஏற்பட்டது.

மேலும் படிக்க: ஜிஎஸ்டியால் கடை நடத்த முடியல.. நிர்மலா சீதாராமனிடம் புலம்பிய தொழிலதிபர்!

இதில் கார் முழுவதும் லாரியின் பின்பக்கதின் கீழ் சிக்கி கொண்டதில் காரில் இருந்து 4 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பராமரிப்பாளர்கள் கிரேன் உதவியுடன் லாரியை தூக்கி காரில் உள்ள உடல்களை மீட்டனர். அதிகாலை நேரங்களில் அதிக விபத்துக்கள் நடப்பதால் மக்கள் விழிப்புடனும் கவனமாகவும் வாகனங்களை ஓட்டிச்செல்ல வேண்டும் என காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest News