5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளர்.. வலுக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்..

அன்னபூர்ணா உணவக உரிமையாளர், உங்கள் அருகில் இருக்கும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் எங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர். வரும்போதெல்லாம் சண்டை போடுகிறார். ஏனென்றால் எங்களுக்கு இனிப்புகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கிறீர்கள். உணவுக்கு 5 சதவிகிதம், காரத்துக்கு 12 சதவிகிதம், அடுத்ததாக பேக்கரி வகையில் பார்த்தால் பிரட் மற்றும் பன் தவிர மற்ற அனைத்திற்கும் 28% ஜிஎஸ்டி வரி விதிக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளர்.. வலுக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்..
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 14 Sep 2024 12:54 PM

நிர்மலா சீதாராமன் கோவையில் உள்ள தொழில் அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கலந்து கொண்டிருந்தார். கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் கலந்துகொண்டு பேசத் தொடங்கிய அன்னபூர்ணா உணவக உரிமையாளர், “ உங்கள் அருகில் இருக்கும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் எங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர். வரும்போதெல்லாம் சண்டை போடுகிறார். ஏனென்றால் எங்களுக்கு இனிப்புகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கிறீர்கள். உணவுக்கு 5 சதவிகிதம், காரத்துக்கு 12 சதவிகிதம், அடுத்ததாக பேக்கரி வகையில் பார்த்தால் பிரட் மற்றும் பன் தவிர மற்ற அனைத்திற்கும் 28% ஜிஎஸ்டி வரி விதிக்கிறீர்கள்.

வானதி சீனிவாசன் கடைக்கு வந்து முதலில் ஜிலேபி சாப்பிடுகிறார். அடுத்ததாக காபி குடிக்கும்போது காரம் தேவைப்படுகிறது. அந்த காரத்துக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி என சொன்னால் சண்டைக்கு வருகிறார். ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வெவ்வேறு விதமான ஜிஎஸ்டி போட்டு கொடுப்பது கஷ்டமாக இருக்குது. ஒரு பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் பன்னுக்குள் வைக்கப்படும் கிரீமுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

இதனால் வாடிக்கையாளர் டென்ஷனாகி எங்களிடம் நீங்கள் கிரீமையும் ஜாமையும் கொண்டு வாருங்கள். நாங்களே வைத்துக் கொள்கிறோம் என சொல்கிறார்கள். எங்களால் கடை நடத்த முடியல மேடம். எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும்” என பேசினார். இது இணையத்தில் பயங்கர வைரலாக பரவியது. அதனை தொடர்ந்து அந்த ஹோட்டல் உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் சந்தித்து, பேசினார். அப்போது நிர்மலா சீதாராமனிடம் பேசிய சீனிவாசன், நிகழ்ச்சியில் பேசியதற்காக மன்னிப்பு கேட்டார். இந்த வீடியோ எதிர்க்கட்சியினர் தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: கங்குவா படத்தில் புது ரிலீஸ் தேதி… இணையத்தில் வைரலாகும் தகவல்!

தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசிய வீடியோ வெளியானதற்கு மாநில பாஜக தலைவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மத்திய நிதி அமைச்சருக்கும், அன்னாபூர்ணா சீனிவாசனுக்கு இடையே நடந்த தனிப்பட்ட சந்திப்பின் உரையாடல் தொடர்பான வீடியோ பகிர்ந்து கொண்டதற்கு எங்கள் கட்சியினர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டேன். இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அன்னபூர்ணா சீனிவாசன் அண்ணா தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை மரியாதையுடன் இத்துடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தொடங்கியது குரூப் 2, 2ஏ தேர்வு.. 2,327 காலி பணியிடங்களுக்காக தேர்வெழுதும் 7.93 லட்சம் பேர்..

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனை அச்சுறுத்தி அடக்குமுறையை ஏவுவதை ஏற்க முடியாது. வானதி ஸ்ரீனிவாசனை வைத்து வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைப்பது பாஜகவின் பாசிச போக்கை காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், “ வலுகட்டாயமாக மன்னிப்பு கேட்க வைப்பது தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். இனி எந்த காலத்திலும் தமிழகத்திலும், கோவையிலும் பாஜகவை மக்கள் ஏற்கமாட்டார்கள். இந்த செயலால் இன்னுமொரு நூறாண்டு ஆனாலும் பாஜக வருந்தம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: சீத்தாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. ஆஸ்துமாவை எதிர்க்கும் அற்புத மருந்து!

” ஜிஎஸ்டியால் ஏராளமான வர்த்தகர்கள், மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இதைத்தான் மத்திய அமைச்சரிடம் ஹோட்டல் உரிமையாளர் கேட்டுள்ளார். அவரது கேள்வி நியாயமானது என்பது நாடெங்கும் பரவி விட்டது. ஆனால், அதிகாரம் அவரை பணிய வைத்துள்ளது” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டும் போது இது தொடர்பாக எனக்கு எதும் தெரியாது என்றும் இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Latest News