5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அண்ணாமலைக்கு அட்வைஸ் கொடுத்த தமிழிசை சௌந்தராஜன்.. தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என அறிவுரை..

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை கடுமையாக் விமர்சனம் செய்தார். இது தொடர்பாக பதிலளித்த முன்னாள் மாநிலத தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதனை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி குறித்து பேசுவது அவரது உரிமை ஆனால் முடிவுகள் எல்லோரிடமும் கேட்டு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலைக்கு அட்வைஸ் கொடுத்த தமிழிசை சௌந்தராஜன்.. தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என அறிவுரை..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 27 Aug 2024 10:26 AM

தமிழிசை சௌந்தராஜன் பேட்டி: தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் அறிவுரை வழங்கியுள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள ஶ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் பாஜகவின் நன்மைக்காக சிறப்பு பூஜையில் பங்கேற்றார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை முதலமைச்சரிடம் எதிர்பார்த்தோம். முருகன் மாநாட்டை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். நேரில் போகவில்லை முருகன் என்றால் நேரில் சொல்ல மாட்டார்போல. ஜாதி, மத, இன வேற்றுமை பார்ப்பதில்லை என்கின்றனர் அதேபோல ஹிந்து மதத்தை வேற்றுமையாக பார்க்கவில்லை என்றால் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்க வேண்டும்..

சகோதரி விஜயதரணி ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைந்தவுடன் பதவி கிடைக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவது இயல்புதான். பாஜகவில் இணைந்த அனைவருக்கும் பதவி கிடைக்கும். சிறிது காலம் ஆகலாமே தவிர காலம் கடக்காது விஜயதாரணி நம்பிக்கையோடு இருக்க வேண்டும். எல்லாருக்கும் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். அதிலும் பெண்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.

இந்து கோயிலின் வருமானம் தேவை ஆனால் இந்து கோயில்களில் நம்பிக்கை இவர்களுக்கு தேவைப்படுவதில்லை. முருகர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காவி மயமாக்கப்படுவதாக ஒற்றுக்கொள்ள முடியாது. பண்பாட்டு ரீதியாக இது சரிதான். பண்பாடு என்பது வாழ்வியலோடு ஒற்றுப் போவது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பள்ளிகளில் தான் இது நிறைவேற்றப்படும் எனக் கூறியிருக்கிறார்கள். கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகளின் வருமானத்தை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என யாரும் சொல்வதில்லை. இந்து மத கோவில்களில் இருந்து வரும் வருமானம், மதம் சார்ந்த வருமானம் காவி வருமானம் என சொல்லி இந்த வருமானம் தேவையில்லை என அவர் சொன்னால் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம் என்றார்.

மேலும் படிக்க: செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இத பண்ணிடுங்க.. இல்லனா சிக்கல்!.. ஆதார் குறித்து வெளியான முக்கிய தகவல்!

நேற்று நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலையின் ஏற்றுக் கொடுத்த கேள்விக்கு, இன்னொரு தலைவரின் பேச்சுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதனை கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து. திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அண்ணாமலை சொல்லி இருக்கிறார். கூட்டணி குறித்து மாநில தலைவர் கூறியிருப்பது அவரது உரிமை. ஆனால் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதை வைத்து அதனை முடிவு செய்துவிட முடியாது. கட்சியில் உள்ள மற்ற தலைவர்களின் கருத்து நிர்வாகத்தின் கருத்து கேட்கப்பட்டு அதிலிருந்து ஒரு முடிவு எடுக்கப்படும். மாநிலத் தலைவர் சொல்லி இருக்கும் கருத்துக்கு உட்படுவது ஒரு காரியகர்த்தாவின் செயல். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்து இறங்க வேண்டும் என்பதை எங்களது ஒற்றை குறிக்கோள் செப்டம்பர் 25 வரை எங்களது முழு கவனம் உறுப்பினர் சேர்க்கையில் தான்.

திமுகவின் நிகழ்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் திமுக ஆலமரம் போன்றது எனக் கூறியிருந்தார் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், அப்படி தான் தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் ஆலமரம் என்றார்கள். அங்கு ஆட்சி மாறி இருக்கிறது . ரஜினிகாந்த திமுகவில் புயலையும் சுனாமியையும் உருவாக்கி இருக்கிறார்

கட்சிக்கு கடுமையாக உழைத்த துரைமுருகன் இன்றும் ஸ்டாலின் அவர்களுக்கு கீழ் இருக்கிறார். அடுத்ததாக உதயநிதிக்கு கீழும் இருக்க வேண்டியுள்ளது . இதனால்தான் வாரிசு அரசியலை நாங்கள் வேண்டாம் என்கிறோம். உதயநிதி ஸ்டாலின் துரைமுருகனின் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சொல்லி இருக்கிறார். அப்போ ரஜினிகாந்தின் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ளலாமா ?

குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. சீனியர்கள் பலரிடம் இருந்த பொறுப்புகள் தற்போது மற்றவர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. திமுக தொண்டர்கள் இதனை சிந்திக்க வேண்டும்.. பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மூத்தவர்களுக்கு பாஜகவில் அதிகம் மரியாதை கிடைக்கும். அதனால் உறுப்பினராக பாஜகவில் சேர்ந்து கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளாஎ.

Latest News