5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் முன் ஜாமின் கேட்ட வழக்கு: இன்று மீண்டும் விசாரணை..

தவறு செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டால் விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும். சிபிஐ எனது வீட்டில் நுழைந்து பொருட்களை கைப்பற்றியது சட்டவிரோதமானது. இது என் மீதான நன்மதிப்பை குலைக்கும் விதமாக உள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறி முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் முன் ஜாமின் கேட்ட வழக்கு: இன்று மீண்டும் விசாரணை..
பொன்மாணிக்கவேல்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 29 Aug 2024 10:17 AM

பொன்மாணிக்கவேல் வழக்கு: சிலை கடத்தில் பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமின் கேட்அ மனு மீது இன்று விசாரணை நடத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் இருந்த பழமையான சிலைகள் விற்கப்பட்ட சம்பவத்தில் போலீஸ் அதிகாரி காதர் பாட்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு பழிவாங்கும் நோக்கில் சிலை தடுப்பு பிரிவு காவல் துறை முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் இந்த வழக்கை தொடர்ந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் பொன்.மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு அவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த ஜாமின் மனுவில், “ஆனால் சிபிஐயின் காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர் வழக்கு பதிவு செய்தது ஏற்கத்தக்கது அல்ல. சட்டவிரோதமானது. தவறு செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டால் விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும். சிபிஐ எனது வீட்டில் நுழைந்து பொருட்களை கைப்பற்றியது சட்டவிரோதமானது. இது என் மீதான நன்மதிப்பை குலைக்கும் விதமாக உள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மனுதாரர் முன்னாள் காவல்துறை மண்டல தலைவராகவும் சிலை கடத்தல் வழக்கை நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற கண்காணிப்பில் நடத்தியுள்ளார். தற்போது இவர் மீது சிபிஐ பொய்யான ஒரு குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மனுதாரருக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

மேலும் படிக்க: சமூகவலைத்தளத்தில் அனுமதியின்றி புகைப்படம் வெளியிட்டால் சிறை தண்டனை – சென்னை காவல்துறை எச்சரிக்கை!

இதற்கிடையில், டிஎஸ்பி காதர் பாட்சா தரப்பில் பொன்மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னால் டிஎஸ்பி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் வாதிடுகையில் பொன்மாணிக்கவேல் இந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் விசாரணையை ஒருதலைபட்சமாக நடத்தியதாகவும் காதர் பாட்ஷா மீது வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறையில் அடைத்ததாகவும் அதே நிலையில் உள்ள மற்ற காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். மேலும் சுபாஷ் கபூர் ஆகியோரை பாதுகாக்கும் விதத்திலும் செயல்பட்டு உள்ளார். எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சீனிவாசன், “ இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. தமிழகத்தில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிப்பில் டிஎஸ்பி காதர் பாட்சா விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கை அப்போதைய காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை காப்பாற்றும் வகையிலும் விசாரணை அதிகாரியாக இருந்த காதர் பாட்ஷா மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளார். குறிப்பாக சிலை கடத்தல் மன்னனாக இருந்த சுபாஷ் கபூர் தற்போது தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பாதுகாக்கும் வகையில் பொன் மாணிக்கவேல் செயல்பட்டு உள்ளார்.

மேலும் படிக்க:  இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா?

இதன் அடிப்படையில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் முதல் கட்ட விசாரணை முடித்து பொன்மாணிக்கவேல் மீது போதிய முகாந்திரம் இருந்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவரை கைது செய்து விசாரணை நடத்தினால் தான் உண்மை கண்டறிய முடியும். ஏன் பொய்யாக டிஎஸ்பி காதர் பாட்சாவே இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் சுபாஷ் கபூருக்கு எந்த வகையில் இவர் உதவி செய்தார் என்பதையும் முழுமையாக கண்டறிய முடியும். எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கில் சுபாஷ் கபூருக்கு ஐஜி பொன்மாணிக்கவேல் நேரடியாக உதவி செய்ததற்கான ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா என கேள்வி எழுப்பினர். அப்போது சிபிஐ தறப்பில் அதற்கான ஆவணங்களை சீல் இடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். சீல்லிடப்பட்ட கவரில் உள்ள ஆவணங்களை படித்து பார்த்து வழக்கு விசாரணை தொடரலாம் என கூறிய நீதிபதி இந்த வழக்கு விசாரணை இன்று ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

Latest News