5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நிலச்சரிவில் துணிச்சலுடன் செயல்பட்ட செவிலியர் சபீனா.. கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்த அரசு..

30.07.2024 அன்று ஏற்பட்ட நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாட்டில் படுகாயம் அடைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவ முதலுதவி பெட்டியை இறுக பற்றிக் கொண்டு வெள்ளம் சீறி வரும் ஆற்றை கவனமாக ஜிப்லைன் மூலம் கடந்து சென்று 35-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய செவிலியர் சபீனாவிற்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

நிலச்சரிவில் துணிச்சலுடன் செயல்பட்ட செவிலியர் சபீனா.. கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்த அரசு..
கல்பனா சாவ்லா விருது வாங்கிய செவிலியர்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 15 Aug 2024 14:56 PM

கல்பனா சாவ்லா விருது: 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார். இன்றைய நிகழ்ச்சியில், தகைசால் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, அப்துல் கலாம் விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் வீர தீர செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. 78வது சுதந்திர தின நிகழ்ச்சியில் செவிலியர் சபீனாவிற்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “ நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த செவிலியர் ஆ. சபீனா அவர்கள் வீர தீர செயல் செய்து நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாட்டில் படுகாயம் அடைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சிகிச்சை அளித்து, பல உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

மேலும் படிக்க:  5 நாட்களுக்கு தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?

30.07.2024 அன்று ஏற்பட்ட நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாட்டில் படுகாயம் அடைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவ முதலுதவி பெட்டியை இறுக பற்றிக் கொண்டு வெள்ளம் சீறி வரும் ஆற்றை கவனமாக ஜிப்லைன் மூலம் கடந்து சென்று 35-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்க ஜிப்லைனை அமைத்தது.

எனினும், தூக்கிச் செல்ல முடியாத அளவுக்கு மக்கள் படுகாயம் அடைந்திருந்தனர். ஆண் செவிலியர் எவரும் இல்லாதபோது, தைரியமும் உறுதியும் கொண்ட சபீனா, ஜிப்லைன் மூலம் மறுபுறம் செல்ல முன்வந்தார். தொடர் மழையின் மத்தியிலும், ரெயின் கோட் அணிந்து, முதலுதவி பெட்டியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, இவர் ஆற்றை எந்த பயமும் இல்லாமல் கடந்தார். ANM பயிற்சியில் டிப்ளமோ பெற்ற இவர் தனது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் சிகிச்சை அளிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தார். ஒற்றைத் தாயாக இருந்த போதிலும், மனித குலத்திற்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டுமென்று தன் ஒரே மகளையும் B.Sc., செவிலியர் படிப்பை படிக்க வைத்துள்ளார். ஆ. சபீனா அவர்களின் தன்னலமற்ற மற்றும் தைரியமான இச்செயல் மற்ற பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது.

மேலும் படிக்க: மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ வேண்டுமா..? இதை பாலோ செய்தால் போதும்!

ஆ. சபீனா அவர்களது வீரமான, துணிவான செயலைப் பாராட்டும் விதமாக அன்னாருக்கு 2024-ஆம் ஆண்டிற்கான துணிவு மற்றும் வீர சாகசச் செயலுக்கான “கல்பனா சாவ்லா விருது” தமிழ்நாடு அரசு வழங்கி சிறப்பிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News