5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Special Trains: அப்படிப்போடு.. தீபாவளி வரை வாராந்திர சிறப்பு ரயில்கள்.. முன்பதிவு தொடக்கம்!

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 120 நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் கடந்த மாதமே தீபாவளிக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கி சில மணி நேரங்களில் விற்று தீர்ந்து விட்டது. இப்படியான நிலையில் நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

Special Trains: அப்படிப்போடு.. தீபாவளி வரை வாராந்திர சிறப்பு ரயில்கள்.. முன்பதிவு தொடக்கம்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 03 Sep 2024 19:42 PM

சிறப்பு ரயில்கள்: நடப்பாண்டு தீபாவளியை முன்னிட்டு நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி முதல் மேட்டுப்பாளையம் வரையும், திருநெல்வேலி முதல் சென்னை எழும்பூர் வரையில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 120 நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் கடந்த மாதமே தீபாவளிக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கி சில மணி நேரங்களில் விற்று தீர்ந்து விட்டது. இப்படியான நிலையில் நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் 

திருநெல்வேலி முதல் மேட்டுப்பாளையம் வரை அக்டோபர் 6 ஆம் தேதி முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வாராந்திர சிறப்பு ரயில் (06029) இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேட்டுப்பாளையம் முதல் திருநெல்வேலி வரை வாராந்திர சிறப்பு ரயில் (06030) அக்டோபர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை இயக்கப்படுகிறது.

இந்த ரயில் திருநெல்வேலியில் இரவு 7 மணிக்கும், மேட்டுப்பாளையத்தில் இரவு 7:45க்கும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் ,கீழ் கடையம், அம்பாசமுத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஜங்ஷன், கிணத்துக்கடவு, படனூர் ஜங்ஷன், கோயம்புத்தூர்  ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் 

06070 என்ற எண் கொண்ட திருநெல்வேலி முதல் சென்னை எழும்பூர் வரையிலான வாராந்திர சிறப்பு முறையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. அதேபோல் 06069 சென்னை எழும்பூர் முதல் திருநெல்வேலி வரை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.  செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை சிறப்பு ரயில் சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ஜங்ஷன், கடலூர் போர்ட், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தன் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி,  கல்லால் சிவகங்கை, விருதுநகர்,  சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும். சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கும்,  திருநெல்வேலியில் இருந்து மாலை 6.45 மணிக்கும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

Latest News