தந்தை, மகன் உயிரைப்பறித்த இரும்பு கட்டில்… கழுத்து நசுங்கி பலி.. திண்டுக்கல் ஷாக் சம்பவம்!
நேற்று இரவு கோபி கிருஷ்ணனும், கார்த்திக் ரோஷனும் மாடியில் டிவி பார்ப்பதற்காக மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது டிவி பார்த்துக்கொண்டு கட்டிலில் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது கட்டிலின் கால் முறிந்து இருவரும் கழுத்து நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டில் கால் முறிந்து தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். இவருக்கு வயது 35. இவர் தையல் தொழிலாளி. இவரது மனைவி லோகேஸ்வரி. வயது 30. இவர் நத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு கார்த்திக் ரோஷன் (வயது 9) மற்றும் யஷ்வந்த் (வயது 6) என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் 4 ஆம் வகுப்பு மற்றும் 1 ஆம் வகுப்பில் படித்து வருகிறார்கள். வழக்கமாக கோபி கிருஷ்ணனும், மூத்த மகன் கார்த்திக் ரோஷனும் மாடியில் இருக்கும் இரும்புக் கட்டிலில் படுத்து உறங்குவது வழக்கம்.
மேலும் படிக்க: உத்திரபிரதேசம், கேரளா, பஞ்சாப் மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி மாற்றம்!
அதே சமயம் தாய் லோகேஸ்வரியும், இரண்டாவது மகன் யஷ்வந்தும் கீழ் வீட்டில் படுத்து உறங்குவது வழக்கம். லோகேஸ்வரி செவிலியர் என்பதால், சுழற்சி முறையில் பணி இருக்கும். அந்த வகையில் நேற்று இரவு கோபி கிரிஷ்ணனும், கார்த்திக் ரோஷனும் மாடியில் டிவி பார்ப்பதற்காக மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது டிவி பார்த்துக்கொண்டு கட்டிலில் படுத்து உறங்கியுள்ளனர். பணிக்கு தாமதாகி வந்த நிலையில், நீண்ட நேரமாகியும் இருவரையும் காணவில்லை என லோகேஸ்வரி தேடி மாடிக்கு சென்றுள்ளார்.
அப்போது தந்தை கோபி கிருஷ்ணன் மற்றும் மூத்த மகன் கார்த்திக் ரோஷன் உயிரிழந்த நிலையில், சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இரண்டு பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: திமுக வளர்வது பிடிக்கல.. விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் போது, மாடியில் இருக்கும் கட்டிலில் இருக்கும் கால்களில் 4 போல்டுகளும் இல்லாதது தெரிய வந்தது. இதனால் கட்டிலின் கால் முறிந்து கீழே விழுந்துள்ளது. கீழே விழுந்ததில் கட்டில் மேல் படுத்து உறங்கியுள்ள கோபி கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் ரோஷன் இருவரின் கழுத்தும் முறிந்துள்ளது.
கட்டிலின் கால் முறிந்து இருவரின் கழுத்து நசுங்கி உயிரிழந்துள்ளதாக காவல் துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வழக்கமாக உறங்கச் சென்ற தந்தை மகன் இருவரும் கட்டில் முறிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.