5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali Special Bus : தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. எந்த எந்த தேதிகளில் எங்கிருந்து இயக்கப்படுகின்றன.. முழு விவரம் இதோ!

Public Transport | தமிழகத்தில் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழர்களின் முக்கிய விழாக்களில் தீபாவளியும் ஒன்றாக இருப்பதால் ஆண்டுதோறும் ஏராளமான பொதுமக்கள், தீபாவளியின்போது தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Diwali Special Bus : தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. எந்த எந்த தேதிகளில் எங்கிருந்து இயக்கப்படுகின்றன.. முழு விவரம் இதோ!
கோப்பு புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 21 Oct 2024 13:11 PM

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்கள் பாதுகாப்பாக பயணிக்கவும் கூடுதலாக சுமார் 14,080 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த சிறப்பு பேருந்துகள் எந்த தேதி முதல் இயக்கப்பட உள்ளன, எந்த எந்த பகுதிகளுக்கு எவ்வளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Cyclone Dana: டானா புயல்.. எங்கே கரையை கடக்கும்? யாருக்கெல்லாம் கனமழை தெரியுமா?

கூடுதலாக 14,080 பேருந்துகள் இயக்க அரசு திட்டம்

தமிழகத்தில் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழர்களின் முக்கிய விழாக்களில் தீபாவளியும் ஒன்றாக இருப்பதால் ஆண்டுதோறும் ஏராளமான பொதுமக்கள், தீபாவளியின்போது தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஏராளமான பொதுமக்கள் ஒரு சில குறிப்பிட்ட நாட்களின் மொத்தமாக பயணம் செய்வதால், கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து தேவைக்கான பேருந்து பற்றாக்குறையும் ஏற்படும். இதனை தவிர்க்கும் வகையில், ஆண்டுதோறும் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 14,080 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Crime: சென்னை தொழிலதிபரிடம் வழிப்பறி.. தஞ்சாவூரில் 4 திருநங்கைகள் கைது

அக்டோபர் 28 ஆம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்களுக்காக கூடுதலாக சுமார் 14,080 பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பேருந்துகள் தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்களுக்கு முன்பில் இருந்து இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதாவது வரும் அக்டோபர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து 11,170 பேருந்துகள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து 2,910 பேருந்துகள் என மொத்தம் சுமார் 14,080 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையை பொறுத்தவரை கிளாபாக்கம், மாதவரம், மற்றும் கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிங்க : TVK Conference: விறுவிறுப்பாக செல்லும் த.வெ.க., மாநாட்டு பணிகள்.. என்னென்ன ஸ்பெஷல்?

பண்டிகை முடிந்து திரும்பவும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையங்கள் எவ்வளவு கூட்ட நெரிசலாக இருக்குமோ அதே அளவிற்கு பொதுமக்கள் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்பும்போதும் பேருந்து நிலையங்கள் கூட்ட நெரிசலுடன் இருக்கும். இதனை தவிர்க்கும் வகையில், பண்டிகை முடிந்து பொதுமக்கள் திரும்ப சிறப்ப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதாவது பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை முடித்து வீடு திரும்பும் வகையில், நவம்பர் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை பொதுமக்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக சுமார் 9,441 பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும்போதும் போக்குவரத்து பற்றாக்குறை இன்றி பயணம் செய்ய முடியும்.

இதையும் படிங்க : Accident: அதிர்ச்சியில் மக்கள்.. தமிழ்நாட்டில் ஒரேநாளில் இத்தனை விபத்துகளா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது மட்டுமன்றி, பேருந்துகள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு அலோசனைகளை அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News