5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அடுத்தடுத்து சர்ச்சை.. முதலமைச்சர் ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமா சந்திப்பு..

திமுக கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியமான கட்சியாக இது இருந்து வருகிறது. இந்நிலையில் விசிக தரப்பில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் முக்கியமாக அதிமுக கட்சிக்கு மாநாட்டில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏறப்டுத்தியது.

அடுத்தடுத்து சர்ச்சை.. முதலமைச்சர் ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமா சந்திப்பு..
திருமாவளவன்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 16 Sep 2024 11:54 AM

உச்சக்கட்ட அரசியல் பரபரப்புக்கு நடுவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார் விசிக தலைவர் திருமாவளவன். தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி மற்றும் தற்போது த.வெ.க கட்சி களத்தில் உள்ளது. இன்னும் ஓராண்டு காலத்தில் தேர்தல் அறிவிக்க்ப்பட உள்ள நிலையில் அரசியல் களம் தற்போது முதலே சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. அதாவது திமுக கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியமான கட்சியாக இது இருந்து வருகிறது. இந்நிலையில் விசிக தரப்பில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் முக்கியமாக அதிமுக கட்சிக்கு மாநாட்டில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏறப்டுத்தியது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் விசிக கட்சி திமுகவில் இருந்து விலகி அதிமுக உடன் கைக்கோற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியது.

திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் விலக தயாரானதாகவும், வரும் தேர்தலில் கூட்டணி தொடராது என்று பேச்சுக்கள் அடிப்பட்டது. அதேவேளையில் பாஜக மற்றும் பாமகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இருப்பினும், திமுக கூட்டணியில் விகிக இருக்காது என்று அரசியல் களத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது குறித்து திருமாவளவன் விளக்கம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கு மது விலக்கு கொள்கையில் உடன்பாடு இருக்கிறது- மது ஒழிப்பு கொள்கையில் உடன்பாடு உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் மாநாட்டில் கலந்து கொள்ளலாம். யாருக்கு நாங்கள் அதிகாரப்பூர்வமாக அழைப்பு கொடுக்கவில்லை. இன்னும் 15 நாட்கள் இருக்கிறது யார் யாரை அழைப்பது என்பது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் CNG மாடல்… அசர வைக்கும் சிறப்பம்சங்கள்!

இது மகளிர் அணி மாநாடு என்பதால் தேசிய அளவில் மகளிர் அணி தலைவர்களை அழைக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். சாதிய, மதவாத சக்திகளை தவிர்த்து மற்ற ஜனநாயக சக்திகள் மாநாட்டில் கலந்து கொள்ளலாம். திமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து விசிக எப்போதுமே பேசவில்லை. திமுக கூட்டணியில் தான் விசிக இருக்கிறது. திமுக கூட்டணியில் தான் விசிக தொடரும்.

மது ஒழிப்பு மாநாட்டை தேர்தலுடன் தொடர்புபடுத்தக்கூடாது. தேர்தல் கூட்டணிக்காக மாநாட்டை நடத்தினால் அதைவிட அசிங்கம் தனக்கு கிடையாது” என தெரிவித்திருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க இரண்டு நாட்களுக்கு முன் திருமாவளவன் தனது எக்ஸ் வலைத்தள பகுதியில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பின்னர் அதனை நீக்கினார். அதாவது, ஆட்சியிலும் அதிகாரித்திலும் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசிய வீடியோவை பதிவிட்டு நீக்கினார். இது பெரும் புயலையே கிளப்பியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள திருமாவளவன், “ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது நீண்ட காலமாக நாங்கள் விடுக்கும் கோரிக்கை. வீடியோ வெளியிட்டது எனக்கு தெரியாது. அட்மின் பதிவிட்டிருக்கலாம்” என்று கூறினார்.

Also Read:  நான் ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்தில் மது விலக்கை நீக்குவேன்.. பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!

இதற்கு பல்வேறு அரசியல் களத்தில் பேரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவிற்கும் விசிகவிற்கும் இடையே கருத்து மோதல் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக விசிக தலைவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அடுத்தடுத்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு கட்சிகள் பல கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார். கடந்த மாதம் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் 17 நாட்கள் பயணம் முடித்து இரண்டு நாட்களுக்கு மின் சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று அவரை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இந்த சம்பவங்கள் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest News