5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: நாளை முக்கிய மாவட்டங்களில் 5 மணி நேர மின் தடை.. உங்க ஏரியாவில் எப்படி?

வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 22ஆம் தேதியான நாளை தமிழகத்தில்சென்னை, கரூர், தருமபுரி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tamilnadu Powercut: நாளை முக்கிய மாவட்டங்களில் 5 மணி நேர மின் தடை.. உங்க ஏரியாவில் எப்படி?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 21 Oct 2024 19:13 PM

பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 22) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, கரூர், தருமபுரி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன.

மின்தடை:

தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 22ஆம் தேதியான நாளை தமிழகத்தில்சென்னை, கரூர், தருமபுரி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு.. அதிகபட்சம் எவ்வளவு தெரியுமா?

எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை?

சென்னை:

வில்லிவாக்கம்:

சிட்கோ நகர் 1 முதல் 10 பிளாக், அம்மன்குட்டி, நேரு நகர், தெற்கு & வடக்கு ஜெகநாதன் நகர், எம்.டி.எச் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, திரு நகர், அகத்தியர் நகர், பொன்விழா நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி, பாரதி என் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி:

கவரப்பேட்டை, கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, சோம்பட்டு, கிளிக்கொடி, பண்பாக்கம், ஆரணி, வடகுநல்லூர், பாலவாக்கம், துரைநல்லூர், போண்டவாக்கம், சின்னம்பேடு, காரணி, புதுவொயல், பெருவொயல், கோளூர், கொசவன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

தருமபுரி:

சோகத்தூர், குமாரசாமிப்பேட்டை, ரெடிஹள்ளி, பிடமனேரி, வி.ஜெடிஹள்ளி, அதகபாடி, பெதரஹள்ளி, இந்தூர், குமாரசாமிப்பேட்டை, நெசவலர் காலனி, ஏ.ஆர்.கோட்ராஸ், ரயில் நிலையம், பென்னாகரம் மெயின் ரோடு, மாந்தூப்பு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி:

மாதவச்சேரி, சேஷசமுத்திரம், அகரகொத்தளம், சித்தேரிப்பட்டு, மரவநத்தம், நகரம், எலியத்தூர், கட்டானந்தல், தச்சூர், சிறுவத்தூர். ஆவின், தொட்டப்பாடி, செம்பக்குறிச்சி, பாக்கம்பாடி, கூகையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

திருப்பூர்:

உடுமலை பகுதியில் ஆலமரத்தூர், பொட்டியம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.உரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் ரயில் நிலையம், நாகல்புத்தூர், பாரதிபுரம், பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, முத்தனம்பட்டி, காப்பிளியப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்:

நென்மேனி, இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி, அப்பாநாயக்கன்பட்டி, சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

வேலூர்:

விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், oogle காவனூர் மற்றும் திமிரி. கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் து கிளரசம்பேட்டை ஆகிய பகுதிகள். அதேபோல, ஜி.ஆர் பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி. அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

கடலூர்:

ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீநெடுஞ்சேரி, ராஜேந்திரபட்டினம், குணமங்கலம், கல்லிபாடி ஏவ் நல்லூர், ஊமங்கலம், அரசகுழி, முத்தனை, கோபாலபுரம், இருப்பு, 0 சாத்தமங்கலம், மேலப்பாளையூர், கீழப்பாளையூர், சி கீரனூர், நல்லூர்பாளையம், அக்கடவல்லி, ஏனாதிரிமங்கலம், திருத்துறையூர், பைதபாடி, நத்தம்,அடரி, பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

Latest News