5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Party: வரும் 27 ஆம் தேதி நடைபெறும் த.வெ.க மாநாடு.. 27 குழுக்கள் அமைத்து தலைவர் விஜய் அறிவிப்பு..

தேர்தல் ஆணையம் த.வெ.க கட்சியை அரசியல் கட்சியாக அங்கீகரித்தது முதல் கட்சி கொடி வெளியீடு என அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக கட்சி அறிவிப்பு வெளியானது முதல் நடிகர் விஜய் பொது பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். கள்ளக்குறிச்சி விஷ சாராயம் முதல் தற்போது அன்மையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது நடந்த உயிரிழப்பு வரை அனைத்திற்கும் குரல் கொடுத்துள்ளார்.

TVK Party: வரும் 27 ஆம் தேதி நடைபெறும் த.வெ.க மாநாடு.. 27 குழுக்கள் அமைத்து தலைவர் விஜய் அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 13 Oct 2024 08:13 AM

வரும் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் அக்கட்சி தரப்பில் 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பல ஆண்டுகளாக அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என தகவல் மட்டுமே வெளியாகிய நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கட்சி தொடங்குவதாக அவர் அறிவித்தார். மேலும் தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விஜய் வெளியிட்ட அறிக்கையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என தெளிவாக எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து படிப்படியாக கட்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் த.வெ.க கட்சியை அரசியல் கட்சியாக அங்கீகரித்தது முதல் கட்சி கொடி வெளியீடு என அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக கட்சி அறிவிப்பு வெளியானது முதல் நடிகர் விஜய் பொது பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். கள்ளக்குறிச்சி விஷ சாராயம் முதல் தற்போது அன்மையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது நடந்த உயிரிழப்பு வரை அனைத்திற்கும் குரல் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க: மழையால் ஸ்தம்பித்த மதுரை.. இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

இப்படியான நிலையில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை பனையூரில் நடைபெற்றது. இதில் சிவப்பு மஞ்சள் வண்ணம் சூழ்ந்திருக்க நடுவில் வாகை மலர், இரண்டு பக்கமும் யானைகள் என கொடியை அறிமுகப்படுத்தினார். ஆனால் கொடியில் யானை உள்ளது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அதானை நிராகரித்து விட்டது.

இதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மதுரை அல்லது திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி வழங்கப்படாத காரணத்தால் விக்கிரவாண்டி தேர்வு செய்யப்பட்டது. பின்னர் மாநாட்டிற்கு காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் தொண்டர்கள் கலந்துக் கொண்டனர். இதனிடையே மாநாட்டுக்கான பணிகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனிடையே இந்த மாநாடு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும்.நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை. இளஞ்சிங்கப் படை. சிங்கப் பெண்கள் படை. குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை” என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இப்படி மாநாட்டிற்கான அனைத்து வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டிற்கான பணிகளை மேற்கொள்ள 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், ” நம் கழகத் தலைவர் அவர்கள் அறிவித்தபடி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா, வருகிற 27.10.2024 அன்று, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.

மாநாட்டுக்கான களப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் மாநாட்டுப் பணிகளுக்கென ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் செயல்வடிவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் அமைத்துள்ள மாநாட்டு குழுவில், ஒருங்கிணைப்பு குழு தலைவராக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஒரு ஒருங்கிணைப்பாளர், 12 குழு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இது தவிர பொருளாதார குழுவில் 3 பேரும், சட்ட நிபுணர்கள் குழுவில் 3 பேரும் இடம் பெற்றுள்ளனர். இப்படி ஒவ்வொரு பிரிவிற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest News