5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Donald Trump: ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்த ட்ரம்ப்.. கமலா ஹாரிஸ் மீது கடும் விமர்சனம்!

நம்மூரில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் எப்படி வித்தியாசமாக பிரச்சாரங்களை வேட்பாளர்கள் மேற்கொள்வார்களோ, அதேபோல் தான் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் செய்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்க மாகாணமான பென்சில்வேனியாவில் உள்ள மெக்டொனால்ட் கடைக்கு சென்ற அவர், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் உணவுகளை தயாரித்து பரிமாறினார். அந்த மாகாண மக்களை கவர ட்ரம்ப் செய்த இந்த செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Donald Trump: ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்த ட்ரம்ப்.. கமலா ஹாரிஸ் மீது கடும் விமர்சனம்!
பிரச்சாரத்தில் ஈடுபட்ட டொனால்ட் ட்ரம்ப்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 21 Oct 2024 16:13 PM

டொனால்ட் ட்ர்ம்ப்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக்க அதிபராக தற்போது ஜோ பைடன் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமஹா ஹாரிஸூம் களமிறங்கியுள்ளனர். முதலில் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் தான் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் டொனால்ட் ட்ரம்ப் உடன் நடந்த நேருக்கு நேர் விவாதத்தில் சொதப்ப  போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸ் உள்ளே வந்தார். இன்னும் 2 வாரம் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நம்மூரில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் எப்படி வித்தியாசமாக பிரச்சாரங்களை வேட்பாளர்கள் மேற்கொள்வார்களோ, அதேபோல் தான் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் செய்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்க மாகாணமான பென்சில்வேனியாவில் உள்ள மெக்டொனால்ட் கடைக்கு சென்ற அவர், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் உணவுகளை தயாரித்து பரிமாறினார். மேலும் அதனை கச்சிதமாக பேக்கிங் செய்து இந்திய வம்சாவளி தம்பதியினருக்கு கொடுத்தார். அந்த மாகாண மக்களை கவர ட்ரம்ப் செய்த இந்த செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் இந்த வித்தியாசமான பிரச்சார நடவடிக்கையானது ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸைக் கண்டிக்கும் நோக்கத்தில் இருந்தது. அதற்கு காரணம், கமலா ஹாரிஸ் தனது இளமை பருவத்தில் துரித உணவு உரிமையில் பணிபுரிந்ததாகக் கூறியிருந்தார். ஆனால் துரித உணவு ஆர்வலரான டொனால்ட் டிரம்ப், ஹாரிஸ் கல்லூரியில் படிக்கும் போது மெக்டொனால்டில் பணிபுரிந்ததில்லை என்று தெரிவித்து வருகிறார்.

Also Read:  Cyber Crime: ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்.. விழிப்புடன் இருப்பது எப்படி?

மேலும் “நாங்கள் மெக்டொனால்டு நிறுவனத்துடன் சரிபார்த்துள்ளோம், அவர்கள் உறுதியாகச் சொல்லும் அளவுக்கு கமலா ஹாரிஸ் அங்கு இளமைக் காலத்தில் பணிபுரிந்ததாக எந்தப் பதிவும் இல்லை. அவர் அங்கு வேலை செய்யவில்லை. பல ஆண்டுகளாக இந்த வேலையைப் பற்றி பொய் சொல்லி வருகிறார்” என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி இருவருக்கும் இடையே குறைந்த அளவு வாக்கு வித்தியாசம் தான் வெற்றிக்காக உள்ளதாக தெரியவந்தது. மேலும் டிரம்பை விட கமலா ஹாரிஸூக்கு நல்ல மவுசு உள்ளது எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் தினமும் பரிசளிக்க போவதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also ReadKaran Johar : கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்.. 50% பங்குகளை ரூ.1,000 கோடிக்கு வாங்கும் ஆதார் பூனவல்லா!

அவர் டொனால்ட் ட்ரம்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் பல நேரங்களில் பிரச்சாரத்தையும் செய்து வருகிறார். இதனுடைய ட்ரம்புக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த எலான் மஸ்க் இதில் தினமும் கையெழுத்து இடுபவர்கள் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். தேர்தல் வரை தினமும் ஒரு ஆதரவாளருக்கு ஒரு மொழி என்றால் பரிசு வழங்கப்படும் எனவும் எலான் மாசுக்கு தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Latest News