Electric Vehicle : இ காமர்ஸ் நிறுவனங்களை மின்சார வாகனம் பயன்படுத்த கூறும் வாடிக்கையாளர்கள்.. ஏன் தெரியுமா? - Tamil News | 96 percentage of people from Chennai and Coimbatore wants e commerce companies to transition to electric vehicles | TV9 Tamil

Electric Vehicle : இ காமர்ஸ் நிறுவனங்களை மின்சார வாகனம் பயன்படுத்த கூறும் வாடிக்கையாளர்கள்.. ஏன் தெரியுமா?

Published: 

10 Sep 2024 16:30 PM

Electric Vehicle Day | இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை அசுர வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குறைவான எண்ணிக்கையிலே ஆட்டோமொபைல் நிறுவனங்களும், ஷோ ரூம்களும் இயங்கிக்கொண்டிருந்த நிலையில் தற்போது திரும்பும் இடமெல்லாம் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் மற்றும் ஷோ ரூம்கள் நிறைந்துள்ளன.

Electric Vehicle : இ காமர்ஸ் நிறுவனங்களை மின்சார வாகனம் பயன்படுத்த கூறும் வாடிக்கையாளர்கள்.. ஏன் தெரியுமா?

மின்சார வாகனம் (Photo Credit : MASTER/Moment/Getty Images)

Follow Us On

இ காமர்ஸ் நிறுவனங்கள் : இ காமர்ஸ் நிறுவனங்களை மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என்று சென்னை மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். காற்று மாசு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கோவை மற்றும் சென்னையை சேர்ந்த சுமார் 96% மக்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 65% நுகர்வோர், காற்று மாசு மற்றும் உமிழ்வை குறைக்கும் வகையில், காற்று மாசு ஏறப்டாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றும் நிறுவனங்களுக்கு மாற தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த முடிவு காற்று மாசு குறித்த ஒரு நள்ள மாற்றத்தை கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : Viral Video : ஆற்றை கடக்கும்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கார் மீது அமர்ந்துக்கொண்டு ஜாலியாக பேசிய தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஆட்டோமொபைல் உற்பத்தியில் அசுர வளர்ச்சியடைந்த இந்தியா

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை அசுர வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குறைவான எண்ணிக்கையிலே ஆட்டோமொபைல் நிறுவனங்களும், ஷோ ரூம்களும் இயங்கிக்கொண்டிருந்த நிலையில் தற்போது திரும்பும் இடமெல்லாம் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் மற்றும் ஷோ ரூம்கள் நிறைந்துள்ளன. இதற்கு காரணம் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு அதிகரித்தது தான். முன்பெல்லாம் பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்துகளை அதிகம் பயன்படுத்தி வந்த மக்கள் தற்போது கார், பைக் போன்ற சொந்த வாகனங்களை பயன்படுத்துகின்றனர். வாகன உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை, வாகன உற்பத்தியின் எண்ணிக்கை, மக்கள் பயன்பாடு உள்ளிட்டவற்றின் உயர்வு காரணமாக காற்று மாசும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

வாகனங்களால் அதிகரிக்கும் காற்று மாசு

வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை வளிமண்டத்தை அடைந்து காற்று மாசை உண்டாக்கிறது. இதன் மூலம் சுற்றுசூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டின் காரணமாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. காற்று மாசால் கடும் சிக்கல்களை எதிர்க்கொண்டு வரும் டெல்லி, அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி எல்லா நாட்களும் அனைவரும் தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்த கூடாது என்றும் மாற்று நாட்களின் சொந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிகளை விதித்தது. டெல்லியை அடுத்து அதிக காற்று மாசு உள்ள நகரமாக சென்னை மாறி வரும் நிலையில், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!

உலக மின்சார வாகன தினம்

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி உலக மின்சார வாகனம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு Sustainability Mobility Network (SMN) என்ற நிறுவனம் காற்று மாசு குறித்த ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதில் Last Mile Delivery நிறுவனங்கள் மூலம் காற்று மாசு கனிசமாக உயர்வதாக தெரிவித்துள்ளது. Last Mile Delivery என்பது வீடு தேடி பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனங்கள் ஆகும். அதாவது ஸ்விக்கி, சொமேடோ, அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆகும். 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, வளிமண்டலத்தில் 5,00,000 டன்கள் கரியமில வாயு எனப்படும் ஒரு வகையான பசுமை இல்ல வாயு வெளியேறியதற்கு இத்தகைய நிறுவனங்கள் மட்டுமே முக்கிய காரணமாக உள்ளதாக அந்த அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : iPhone 16 Series : சந்தையில் அறிமுகமானது ஐபோன் 16 சீரீஸ்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

காற்று மாசை கட்டுப்படுத்த தயாராக இருக்கும் மக்கள்

சென்னையில் காற்று மாசு குறித்து நடத்தப்பட்ட இந்த அய்வில் பதிலளித்த 92% மக்கள், விநியோக நிறுவங்களின் ஊழியர்கள் மின்சார வாகங்கள் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசு மற்று உமிழ்வை தடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். 66% மக்கள் காற்று மாசை குறைக்க நடவடிக்கை எடுக்கும் நிறுவனங்களில் நுகர்வோராக மாற தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் மூலம் சென்னை மாநகரில் சுமார் 49% பேர் காற்று மாசு குறித்த தெளிவான விழிப்புணர்வை கொண்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. நாட்டிலேயே காற்று மாசு குறித்த அதிக விழிப்புணர்வு கொண்ட மக்கள் உடைய நகரமாக புனே முதல் இடத்தில் உள்ள நிலையில், இரண்டாவதாக சென்னை உள்ளது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version