5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Actor Ajith : நடிகர் அஜித் வாங்கிய புதிய கார்.. விலையை கேட்டு வாய் பிளக்கும் ரசிகர்கள்.. எவ்வளவு தெரியுமா?

New Car | நடிகர் அஜித் கார் மற்றும் பைக் மீது அதிக ஈடுபாடு உடையவர் என்பதால் அவரிடம் அதிகப்படியாக கார்கள் மற்றும் பைக்குகள் உள்ளான. நடிகர் அஜித் அதிகபட்சமாக ரூ.34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார் வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ரூ.9 கோடி மதிப்புள்ள ஃபெராரி கார் ஒன்றை வாங்கினார் அஜித்.

Actor Ajith : நடிகர் அஜித் வாங்கிய புதிய கார்.. விலையை கேட்டு வாய் பிளக்கும் ரசிகர்கள்.. எவ்வளவு தெரியுமா?
அஜித் வாங்கிய கார்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 13 Sep 2024 16:34 PM

புதிய கார் வாங்கிய நடிகர் அஜித் : நடிகர் அஜித் புதிய கார் வாங்கியுள்ளதாக அவரது மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காருடன் அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நடிகர் அஜித் வாங்கிய காரின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விலை குறித்தும் அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் வாய் பிளக்கின்றனர். அப்படி நடிகர் அஜித் என்ன கார் வாங்கி இருக்கிறார், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Annamalai: வெளியான வீடியோ.. மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. விஸ்வரூபம் எடுக்கும் அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்!

நடிகர் அஜித் வாங்கிய புதிய கார் – சிறப்பு அம்சங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிகர் மட்டுமன்றி கார் ரேசர், பைக் ரேசர் என பல முகங்களை கொண்டவர். சமீப காலமாக நடிப்பில் பெரிதாக ஆர்வம் காட்டாத அஜித், சுற்றுலா செல்வது, பைக்கில் டூர் செல்வது, கார் மற்றும் பைக் ரேஸ்களில் பங்கேற்பது என பிசியாக உள்ளார். சினிமா மற்றும் பொது வாழ்க்கையில் இருந்து சற்று விலகியே இருக்கும் அஜித், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Porsche GTR RS காரை வாங்கி கவனத்தை ஈர்த்த நடிகர் அஜித்

இந்த நிலையில் நடிகர் அஜித் தற்போது Porsche GTR RS காரை வாங்கியுள்ளார். இது குறித்து அஜித்தின் புகைப்படத்துடன் இணையத்தில் பதிவிட்டுள்ள அவரது மனைவி ஷாலினி அவர் கார், ஸ்டைல் மற்றும் எனது இதயத்தை பெற்றுக்கொண்டார் என்று பதிவிட்டுள்ளார். ஷாலினியின் இந்த பதிவிற்கு கீழ் அஜித்தின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஷாலிலி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், அஜித் வாங்கியுள்ள புதிய காரின் விலையை கேட்டு ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

Porsche GTR RS காரின் சிறப்பு அம்சங்கள் என்ன?

நடிகர் அஜித் வாங்கியுள்ள Porsche GTR RS கார் வழக்கமான 911-ன் ட்ராக்ஸ்பெக் மற்றும் ஹார்ட்கோர் பதிப்பாகும். Porsche GTR RS காரின் ஏரோடைனமிக்ஸில் பெரிய மேம்பாடுகளை பெறுகிறது. இந்த காரின் மிகப்பெரிய பின்புற விங் பொருத்தப்பட்டுள்ளது. GTR RS கார் Le Mans class – winning 911 RSR மற்றும் 911 GT3 R ஆகியவற்றை இன்ஸ்பிரேஷனாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ.3.5 கோடி ஆகும். இந்த கார் லைட் வெயிட்டாக செய்யப்பட்டுள்ளதால் வேகமாக செல்வது, ரேசிங் செல்வதற்கு சிறந்ததாக இருக்கு. நடிகர் அஜித்திற்கு ரேசிங் பிடிக்கும் என்பதால் இந்த காரை வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : பாதுகாப்பின் உச்சம்.. மகளின் தலையில் சிசிடிவி கேரமா பொருத்திய தந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நடிகர் அஜித்திடம் இருக்கும் கார்கள்

நடிகர் அஜித் கார் மற்றும் பைக் மீது அதிக ஈடுபாடு உடையவர் என்பதால் அவரிடம் அதிகப்படியாக கார்கள் மற்றும் பைக்குகள் உள்ளன. நடிகர் அஜித் அதிகபட்சமாக ரூ.34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார் வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ரூ.9 கோடி மதிப்புள்ள ஃபெராரி கார் ஒன்றையும் அவர் வாங்கினார் அஜித். அப்போது நடிகர் அஜித் தான் வாங்கிய ஃபெராரி கார் உடன் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அஜித் தனது அடுத்த காரான Porsche GTR RS காரை வாங்கியுள்ளார்.

இந்த காரை வாங்குவதற்கு முன்பு அஜித் பார்வைட சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News