5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

6 மணி நேரத்தில் சார்ஜிங்.. ஏதெர் புதிய ஸ்கூட்டர்: விலை என்ன?

Ather Rizta first ride review: ஏதெர் ரிஸ்டா (Rizta) மூன்று வகைகளில் கிடைக்கிறது. S ஆனது 2.9kWh பேட்டரி பேக், Z ஒரு 2.9kWh பேட்டரி பேக் மற்றும் Z ஒரு 3.7kWh பேட்டரி பேக் உடன் வருகிறது. இதனல், இந்த பைக்குகளை 0 முதல் 80 சதவீதம் வரை வெறும் ஆறு மணி நேரத்திற்குள் சார்ஜ் செய்ய முடியும். தொடர்ந்து, ஸ்கூட்டரில் மடிக்கக்கூடிய ஃப்ராங்க் போன்ற பிற பாகங்களும் உள்ளன.

6 மணி நேரத்தில் சார்ஜிங்.. ஏதெர் புதிய ஸ்கூட்டர்: விலை என்ன?
ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.
Follow Us
intern
Tamil TV9 | Published: 25 May 2024 00:35 AM

ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஏதேர் (Ather) நிறுவனம் கடந்த மாதம் தனது இரண்டாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பான ரிஸ்ட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஏதெர் ரிஸ்டா (Ather Rizta) ஆனது 450’s பிளாட்ஃபார்மில் பெரிய இருக்கைக்கு இடமளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட பின்புறப் பகுதியைக் கொண்டுள்ளது. இது உண்மையிலேயே குடும்பத்திற்கு ஏற்ற வடிவமைப்பாகும். இரண்டு பெரியவர்களுக்கான இடவசதி இதில் உள்ளது. ஸ்கூட்டர் நீளமாகவும், கால்களுக்கு இடமளிக்கும் வகையில் பெரிய ஃபுட்போர்டுடனும் வருகிறது. இருப்பினும், ஏதர் ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாக அறியப்படுகிறது.

பேட்டரி வகைகள்

ஏதெர் ரிஸ்டா (Rizta) மூன்று வகைகளில் கிடைக்கிறது. S ஆனது 2.9kWh பேட்டரி பேக், Z ஒரு 2.9kWh பேட்டரி பேக் மற்றும் Z ஒரு 3.7kWh பேட்டரி பேக் உடன் வருகிறது.
இதனல், இந்த பைக்குகளை 0 முதல் 80 சதவீதம் வரை வெறும் ஆறு மணி நேரத்திற்குள் சார்ஜ் செய்ய முடியும். தொடர்ந்து, ஸ்கூட்டரில் மடிக்கக்கூடிய ஃப்ராங்க் போன்ற பிற பாகங்களும் உள்ளன.
மேலும், ரிஸ்டாவின் வடிவமைப்பு, வழக்கமானதாக இருந்தாலும், அதன் விளக்குகள் தோற்றம் சிறப்பானதாக உள்ளது. தொடர்ந்து, ரீஜென் பிரேக்கிங், ஆட்டோஹோல்ட் மற்றும் ரிவர்ஸ் மோட் ஆகியவற்றின் செயல்பாடுகள் பயணத்தை இன்னமும் எளிமையாக்குகின்றன.

விலை

டாப்-எண்ட் ரிஸ்ட்டாவின் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மற்றும் விலை சில தனிநபர்களுக்கு கவலையாக இருக்கலாம். ஆனால் ஏதர் ரிஸ்ட்டா ஒரு வசதியான, நடைமுறை மற்றும் அம்சம் நிறைந்த மின்சார ஸ்கூட்டரைத் தேடும் குடும்பங்களுக்கு சிறந்த தேர்வாகும்.
ஸ்கூட்டரை பொறுத்தவரை, தனித்துவமான வடிவமைப்பு மற்றும் போர்டில் உள்ள பல அம்சங்களுக்காக ரிஸ்டாவிற்குப் பாராட்டப்பட வேண்டும். விலையைப் பொறுத்தவரை, ரிஸ்டாவின் விலை ரூ. 1.10 லட்சம் முதல் ரூ. 1.45 லட்சம் ஆகும்.

இதையும் படிங்க : விலை ஜஸ்ட் 22 லட்சம்.. மணிக்கு 253 கி.மீ பறக்கும்: இந்த பைக்குகள் தெரியுமா?

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை

நாட்டில் தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த காலத்தை விட 33.3 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. இந்தப் பட்டியலில் ஓலா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
கடந்த நிதியாண்டில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையான நிலையில், தற்போது, விற்பனை 3 லட்சமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், வாகன் போர்ட்டலில் உள்ள தரவுகளின்படி, 2022-23ல் 682,937 யூனிட்களாக இருந்த இரு சக்கர எலக்ட்ரிக் வாகன விற்பனை தற்போது 910,930 யூனிட் ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Budget Cars : லாங் டிரைவ் செல்ல ஏற்ற சூப்பரான 7 கார்கள்.. லிஸ்ட் இதோ!