CNG Bike : கேஸ் மூலம் ஓடும் பைக்.. பஜாஜ் அறிமுகம் செய்த ஃப்ரீடம் 125 CNG
Bajaj Freedom 125 CNG bike : இந்த பைக்கின் சிறப்பம்சம் என்னெவென்றால் இது CNG பைக். CNG என்றால், Compressed natural gas. அதாவது பெட்ரோல், எலெக்ட்ரிக் மாதிரி எரிவாயு நிரப்பபட்ட கேஸ் சிலிண்டர் மூலம் இயங்கும் பைக் ஆகும். இந்த பைக்கின் சீட்டிற்கு கீழே சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் எரிவாயு நிரப்பப்படுவதன் மூலம் பைக்கை ஓட்டிச் செல்லலாம். பெட்ரோல் பைக்குகளுடன் ஒப்பிட்டால் இது நமக்கு செம லாபமாக இருக்கும்.
பஜாஜ் : நாட்டின் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃப்ரீடம் 125 CNG பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது , மேலும் புதிய பைக் மாடல் மூன்று முக்கிய வகைகளில் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. எக்ஸ்-ஷோரூம், புதிய பைக்கின் டிரம் வேரியன்ட் விலை ரூ. 95 ஆயிரம், டிரம் எல்இடி விலை ரூ. 1.05 லட்சம் மற்றும் டிஸ்க் LED விலை ரூ. 1.10 லட்சம் ஆக உள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சம் என்னெவென்றால் இது CNG பைக். CNG என்றால், Compressed natural gas. அதாவது பெட்ரோல், எலெக்ட்ரிக் மாதிரி எரிவாயு நிரப்பபட்ட கேஸ் சிலிண்டர் மூலம் இயங்கும் பைக் ஆகும். இந்த பைக்கின் சீட்டிற்கு கீழே சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் எரிவாயு நிரப்பப்படுவதன் மூலம் பைக்கை ஓட்டிச் செல்லலாம். பெட்ரோல் பைக்குகளுடன் ஒப்பிட்டால் இது நமக்கு செம லாபமாக இருக்கும்.
பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு மாடல்களிலும் இயங்கும் இந்த புதிய பைக்கில் மேம்பட்ட தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்டு 125சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 9.37 குதிரைத்திறனையும், 9.7 என்எம் முறுக்குவிசையையும் உற்பத்தி செய்கிறது .
Also Read : ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி.. அள்ளிக்கொடுக்கும் மாருதி சுஸுகி
பஜாஜ் நிறுவனத்தின் தகவலின்படி, புதிய பைக் சிஎன்ஜியில் 1 கிமீ ஓட ரூ. 1 செலவாகும், மேலும் 1 கிமீ தூரத்தை முற்றிலும் பெட்ரோலில் கடக்க ரூ.2.25 செலவாகும் என்று கூறப்படுகிறது, இதில் 2 கிலோ கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி டேங்க் நிறுவப்பட்டுள்ளது.புதிய பைக்கின் இருக்கைக்கு அடியில் சிஎன்ஜி டேங்க் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் சேஸ் ஃப்ரேமில் உள்ள சிஎன்ஜி டேங்க் பாதுகாப்பாக உள்ளது. இருக்கைக்கு கீழே சிஎன்ஜி டேங்க் அமைந்திருப்பதால், சாதாரண பைக் மாடலை விட பைக் இருக்கையின் நீளம் அதிகரித்துள்ளது, இது நீண்ட தூர பயணத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று சொல்லலாம்.
எரிவாயு சிலிண்டர் மட்டுமின்றி 2 லிட்டர் கொள்ளளவு தாங்கும் அளவுக்கான பெட்ரோல் டேங்கும் இருக்கிறது. ஆக இந்த பைக் எரிவாயு, பெட்ரோல் இரண்டிலும் ஓட்டலாம். எரிவாயு மூலம் 200கிமீ இந்த பைக் பயணம் செய்யும். பெட்ரோல் மூலம் 100கிமீ அதிகமாக பயணம் செய்யலாம். ஆக மொத்தமாக 300கிமீ மேல் பயணம் செய்ய முடியும்.
இது தவிர, புதிய பைக் அதிக மைலேஜுடன் அதிக பிரீமியம் அம்சங்களை வழங்குகிறது, டாப் எண்ட் மாடலில் எல்இடி விளக்குகள், புளூடூத் இணைப்புடன் கூடிய எல்சிடி திரை, எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் பாதுகாப்பிற்காக டிஸ்க் பிரேக் உள்ளது. மேலும், புதிய பைக்கில் மொத்தம் 7 விதமான வண்ணங்களில் கிடைக்கும், இது என்ட்ரி லெவல் பைக் விற்பனையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறலாம். பல வகையான டெஸ்டுகள் செய்யப்பட்டு இந்த எரிவாயு பைக் சந்தைக்குள் வந்துள்ளது.