5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Top Sales SUV Cars: இந்தியாவில் அதிகமாக விற்பனையான SUV கார்கள்.. முதலிடம் எது தெரியுமா?

இந்தியாவில் அதிகம் விற்பனையான SUV கார்கள்: கடந்த காலங்களை விட இந்த ஆண்டில் அதிகளவில் கார்களின் விற்பனை உயர்ந்துள்ளது. அந்த வகையில் SUV கார்களின் விற்பனையில் முதலிடத்தில் எந்த கார் உள்ளது என்பதையும் டாப் 10 பட்டியலில் எந்த கார் உள்ளது என்பதையும் பார்க்கலாம்.

Top Sales SUV Cars: இந்தியாவில் அதிகமாக விற்பனையான SUV கார்கள்.. முதலிடம் எது தெரியுமா?
டாடா பஞ்ச் (Photo Credit: Tata Motors)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 16 Dec 2024 00:13 AM

கொரோனா காலத்திற்குப் பிறகு இந்த ஆண்டு ஆட்டோமொபைல் விற்பனைகள்‌ பெரிய அளவில் வளர்ச்சியை கண்டுள்ளன. இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், வணிக வாகனம் என எல்லா வகை வாகனங்களும் அதிகளவில் விற்பனையாகி உள்ளது. அதிலும் பண்டிகை காலங்களில் விற்பனை படுஜோராக நடைபெற்று உள்ளது. அந்த வகையில் எஸ்யூவி ரக கார்களும் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. அதில் அனைத்து நிறுவனங்களின் மாடல்களையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் டாடா பஞ்ச் உள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 1,86,958 யூனிட் டாடா பஞ்ச் மாடல் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாடா பஞ்ச் மாடலின் அதிக யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு இதன் மைக்ரோ எஸ்யூவியின் 1,50,182 யூனிட்டுகள் இந்த நிறுவனம் விற்பனை செய்தது.

டாடா பஞ்ச்:

டாடா பஞ்ச் கார் கொடுக்கும் பணத்திற்கு மதிப்புமிக்க மாடல் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 1,86,958 யூனிட் டாடா பஞ்ச் மாடல் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது மின்சார வாகனம் (EV) மற்றும் இன்டர்னல் கம்ப்யூசன் என்ஜின் (ICE) ஆகிய இரு பதிப்புகளில் கிடைக்கிறது.

இது ஒரு என்ட்ரி லெவல் எஸ்யூவுக்கு ஏற்ற வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இது ஐந்து நட்சத்திர சேஃப்டி ரேட்டிங்கை பெற்றுள்ளது. எல்லாவற்றிக்கும் மகுடம் வைத்தது போல இது மிகவும் குறைந்த விலையில் பல சிறப்பு அம்சங்களுடன் கிடைக்கக்கூடிய மாடலாக இருக்கிறது.

டாடா பஞ்சின் இன்டெர்னல் கம்ப்யூசன் இன்ஜின் பதிப்பில் 88PS அதிகபட்ச ஆற்றல் மற்றும் 115 Nm பீக் டார்க் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் 1.2 லிட்டர் அளவு கொண்டுள்ளது. மேலும் இதில் 5 ஸ்பீடு MT 5 மற்றும் ஸ்பீடு AMT ஆகிய விருப்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் எக்ஸ் ஷோரூம் இன் விலை ரூ.6.13 லட்சத்தில் தொடங்கி ரூ.10.15 லட்சம் வரை விற்பனையாகிறது. இவன் மின்சார வாகனம் ரூ.9.99 லட்சத்தில் தொடங்கி ரூ.12.29 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.

Also Read: Honda Amaze: அசத்தலான அப்டேட்டுடன் வெளியான ஹோண்டா அமேஸ்.. விலை தெரியுமா?

ஹூண்டாய் க்ரெட்டா:

இந்த கார் இந்த நவம்பர் வரை 1,74,311 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது. இந்த கார் 52 வேரியண்டுகள் மற்றும் 6 வண்ணங்களில் கிடைக்கிறது. இது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. செயல் திறன், சொகுசு, வசதிகள், மைலேஜ் என அனைத்திலும் சமரசம் இல்லாமல் சிறந்த வாய்ப்பினை வழங்குகிறது.

இதன் பெட்ரோல் மாடல்களின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.10,99,900 முதல் ரூ.20,14,900 வரை விற்கப்படுகிறது. அதுபோல் டீசல் மாடல்களின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.12,55,700 முதல் ரூ.20,29,800 வரை விற்கப்படுகிறது.

மாருதி சுசுகி பிரெஸ்ஸா:

இந்த கார் இந்த நவம்பர் வரை 1,70,824 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது. இந்த கார் 15 வேறுபாடுகளில் ஐந்து விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மாடலின் எக்ஸ் ஷோரூம் இன் விலை ரூ.8,33,969 முதல் ரூ.14,14,000 வரை விற்கப்படுகிறது. அதைப்போல் CNG மாடல்களின் எக்ஸ் ஷோரூமின் விலை ரூ.9,28,999 தொடங்கி ரூ.12,25,499 வரை விற்கப்படுகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ:

இந்த கார் இந்த நவம்பர் வரை 1,54,169 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது. இந்த கார் 34 வேறுபாடுகளில் மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. இது பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.13,85,200 முதல் ரூ.22,14,700 வரை விற்கப்படுகிறது. அதுபோல டீசல் மாடல்களின் விலை ரூ.14,24,700 தொடங்கி ரூ.24,54,100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Also Read: இரவில் கார் ஓட்டுவீர்களா? இந்த விஷயங்களில் கவனமா இருங்க!

டாடா நெக்ஸான்:

இந்த கார் இந்த நவம்பர் வரை 1,48,075 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது. இந்த கார் 107 வேறுபாடுகளில் மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. 8 லட்சத்தில் தொடங்கி 15.50 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது தவிர மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் மாடல் 1,45,484 யூனிட்களும், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் 1,15,654 யூனிட்களும், ஹூண்டாய் வென்யு மாடல் 1,07,554 யூனிட்களும், கியா சோனெட் மாடல் 1,03,353 யூனிட்களும் விற்பனையாகியுள்ளன.

Latest News