5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Car Mileage: கார் மைலேஜ் அதிகரிக்கணுமா? இந்த தவறுகளை செய்யாதீங்க!

கார் மைலேஜ் : சில சிறிய தவறுகள் உங்கள் வாகனத்தின் மைலேஜை மோசமாக பாதிக்கவும் வாய்ப்புள்ளது. கார் ஓட்டுவது பற்றிய முழு தெளிவும் இருப்பது முக்கியம். விருப்பப்படி வாகனம் ஓட்டுவது குறைந்த மைலேஜ் தருவது மட்டுமின்றி அதிக எரிபொருளையும் செலவழிக்கிறது. உங்கள் காரின் மைலேஜை அதிகரிக்கவும், தவறுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கவும் இங்கே சில டிப்ஸ்களை சொல்கிறோம்.

Car Mileage: கார் மைலேஜ் அதிகரிக்கணுமா? இந்த தவறுகளை செய்யாதீங்க!
கார் மைலேஜ் டிப்ஸ்
Follow Us
c-murugadoss
CMDoss | Published: 26 Aug 2024 08:57 AM

கார் டிப்ஸ் : காரோ, பைக்கோ, நாம் எந்த வகையான வாகனங்களை வாங்கினாலும் நாம் அனைவரும் முதலில் நினைப்பது மைலேஜ் குறித்துதான். நல்ல மைலேஜ் மற்றும் பாதுகாப்பு தான் ஒரு வாகனத்தின் மிக முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும். சில கார்கள் நல்ல மைலேஜ் கொடுக்கும் என நிறுவனத்தால் சொல்லப்பட்டாலும் அதை பயன்படுத்தும் விஷயங்களை வைத்து அதன் மைலேஜ் கம்மி ஆகலாம். கார் மைலேஜை அதிகரிக்க சரியான அணுகுமுறை மற்றும் ஓட்டும் பழக்கம் மிகவும் முக்கியம். ஒரு சில சிறிய தவறுகள் உங்கள் வாகனத்தின் மைலேஜை மோசமாக பாதிக்கவும் வாய்ப்புள்ளது. கார் ஓட்டுவது பற்றிய முழு தெளிவும் இருப்பது முக்கியம்.

இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் போதும்.. டாடா நெக்ஸான் சிஎன்ஜி கார்!

விருப்பப்படி வாகனம் ஓட்டுவது குறைந்த மைலேஜ் தருவது மட்டுமின்றி அதிக எரிபொருளையும் செலவழிக்கிறது. உங்கள் காரின் மைலேஜை அதிகரிக்கவும், தவறுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கவும் இங்கே சில டிப்ஸ்களை சொல்கிறோம்.

  1. சரியான நேரத்தில் சர்வீஸ்: எஞ்சின், ஏர் ஃபில்டர், ஆயில் ஃபில்டர் ஆகியவற்றின் வழக்கமான சர்வீஸ் கார் எஞ்சினை சீராகவும் சரியாகவும் இயங்க வைக்கிறது. இதனால் மைலேஜ் அதிகரிக்கும். சர்வீஸ் செய்வதில் ஏற்படும் தாமதம் என்ஜினில் கூடுதல் பளுவை ஏற்படுத்துகிறது. இது எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கிறது. இதனால் மைலேஜ் கம்மியாகும்
  2. டயர் பராமரிப்பு: டயரில் இருக்கும் காற்றின் அளவு முதல் அதன் பராமரிப்பு வை மிக முக்கியம். சரியான அளவில் காற்று இல்லாமல் டயர் இருந்தாலும் அந்த அழுத்தம் டயர் ஓடும் வேகத்தை குறைக்கும். குறைந்த அல்லது அதிக டயர் அழுத்தம் எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.
  3. ஸ்மூத் டிரைவிங்: காரின் சராசரியான வேகத்தில் ஓட்டுவது மிக முக்கியம். அதிவேகம், திடீரென சீறிக்கொண்டு செல்வது, திடீரென பிரேக் போடுவது போன்ற சீரற்ற ட்ரைவிங் எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கும்.. மைலேஜ் குறையும்.
  4. காரில் தேவையற்ற எடை: காரின் எடை குறைவாக இருந்தால், அதற்கு தேவையான சக்தி குறைவு. இது மைலேஜை அதிகரிக்கிறது. தேவையில்லாத பொருட்களை எடுத்துச் செல்வது காரின் எடையைக் கூட்டுகிறது. இது என்ஜினில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மைலேஜ் குறைகிறது.
  5. சரியான கியரைப் பயன்படுத்தவும்: சரியான கியரில் ஓட்டுவது இன்ஜின் RPM ஐக் கட்டுக்குள் வைத்திருக்கும். இது எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கிறது. தவறான கியரில் ஓட்டுவது என்ஜினில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கிறது.
  6. ஏசியை சரியாக பயன்படுத்துதல்: தேவையில்லாதபோது ஏசியை அணைத்து வைக்கவும். இது எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கிறது. ஏசியின் அதிக பயன்பாடு எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கிறது. இது மைலேஜை எதிர்மறையாக பாதிக்கும்.
  7. காரின் வேகத்தைக் கட்டுப்படுத்துங்கள்: மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் ஓட்டுவது அதிக மைலேஜ் தரும். அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது அதிக எரிபொருள் செலவுக்கு வழிவகுக்கிறது மற்றும் மைலேஜ் குறைகிறது.

இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் காரின் மைலேஜை அதிகரிக்கலாம். எரிபொருளைச் சேமிக்க முடியும். ஒரு சிறிய தவறு மைலேஜில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே கவனமாகவும் சரியாகவும் ஓட்டுங்கள்.

Latest News