விலை ரூ.1.40 லட்சம்.. வந்தாச்சு அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 4வி.. இதன் சிறப்பம்சம் என்ன?
Apache RTR 160 4V: இந்திய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 4வி மாடல் பைக்குகள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன. இதில் சில வித்தியாசங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பைக்குகளின் விலை ரூ.1.40 லட்சம் ஆகும்.
டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் (Apache RTR) 160 4V ஆனது 150-160cc பிரிவில் மிக அதிகமாக விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாகும். இந்நிலையில், டி.வி.எஸ் தற்போது ரூ.1.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் புதுப்பிக்கப்பட்ட அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 4வி-யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடலில் ஓர் சிறிய இயந்திர மேம்படுத்தல் புதுப்பிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாடலின் விலைகள் ரூ.500 முதல் ரூ.1,000 வரை சிறிய உயர்வை சந்திக்கும் எனவும் கூறப்படுகிறது.
டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 4வி வடிவமைப்பு, மாற்றங்கள்
டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 4வி இன் ஒட்டுமொத்த வடிவமைப்பு மாறாமல் இருந்தாலும், புதிய டூயல்-டோன் கிரானைட் கிரே கலர் ஸ்கீம், பில்லன் சீட், அலாய் வீல்கள், டேங்க் எக்ஸ்டென்ஷன்கள் மற்றும் முன் ஃபெண்டர் ஆகியவற்றில் சிறிய அளவிலான மாறுபாடுகள் உள்ளன.
மேலும், மாடலில் மேட் பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் உள்ளிட்ட தற்போதைய வண்ண விருப்பங்களை டிவிஎஸ் வழங்கியுள்ளது. இதற்கிடையில், மற்றொரு பெரிய மேம்படுத்தல் என்னவென்றால் 37மிமீ தலைகீழான முன் ஃபோர்க்குகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த பிரிவு டூவீலரில் இந்த அம்சத்தைப் பெறும் முதல் பைக் இதுவாகும். மேலும், கோல்டன் பூச்சும் பைக்கின் தோற்றத்தை மேம்படுத்துகின்றன. மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஒரு புதிய டூயல்-பேரல் புல்பப் எக்ஸாஸ்ட் ஆகும்.
இதையும் படிங்க : உலகில் நீண்ட நேரம் பயணிக்க கூடிய டாப் 5 விமானங்கள்!
பைக்கின் சிறப்பம்சங்கள்
அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 4வி ஆனது, இந்தப் பைக் பிரிவில் மிகச் சிறந்ததாகும். இதில், புளூடூத் இணைப்பைச் செயல்படுத்தும் டி.வி.எஸ் ஸ்மார்ட் கனெக்ட் டி.எம் (TVS SmartXonnect TM) தொழில்நுட்பம், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி விழிப்பூட்டல்கள் மற்றும் குரல் உதவி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
மேலும், முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் போன்ற அம்சங்களுடன் இது வருகிறது. இது எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லாம்ப், க்ளைடு த்ரூ டெக்னாலஜி (ஜிடிடி) மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பிரேக் மற்றும் கிளட்ச் லீவர்கள் ஆகியவற்றிலிருந்தும் பயனடைகிறது.
எஞ்சின்- செயல்பாடுகள்
இந்த அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 4வி சிறந்த-இன்-கிளாஸ் பவரை வழங்குகிறது. மேலும், இதில் பைக்கை இயக்குவது 159.7சிசி, ஆயில்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட், 4-வால்வு எஞ்சின் ஆகும். இதனால், இது 9,250 ஆர்பிஎம்மில் 17.55 பிஎஸ் மற்றும் 7,500 ஆர்பிஎம்மில் 14.73 என்எம் உச்ச முறுக்குவிசை கிடைக்கிறது.
இந்த இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது. இது உறுதியான சவாரிக்கு வழிகோலுகிறது. இந்தப் பைக்கின் விலை ரூ.1.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பைக் நடுத்தர மக்களுக்கு ஓர் சிறந்த தேர்வாகும்.
இதையும் படிங்க : கார் விலையில் KTM பைக் புது மாடல்.. விலை மற்றும் விவரங்களை வெளியிட்ட நிறுவனம்!