Driverless Cybercab: டிரைவரே கிடையாது… விரையில் அறிமுகமாகும் ரோபோ டாக்ஸி.. சிறப்பம்சங்கள் என்ன?
Driverless Cybercab: உலகின் தலைசிறந்த எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா தற்போது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓட்டுநர் இல்லாத ரோபோ டாக்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்வில் எல்லாம் மாஸ்க் இந்த வண்டியில் அமர்ந்தபபடி இதனை அறிமுகப்படுத்தினார். தற்போது 50 வாகனங்களை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டு முதல் முழு அளவினால் உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தொழிலதிபரான எல்லாம் மாஸ்கின் டெஸ்லா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோபோ டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்ற ‘We Robot’ என்னும் நிகழ்ச்சியில் சைபர் கேப் உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரோபோ டாக்ஸியின் உண்மையான திறனை வெளிப்படுத்தும் வகையில் எலான் மாஸ்க் இந்த வண்டியை ஓட்டி உள்ளார்.
எலான் மாஸ்க் அறிவித்துள்ள தகவலின்படி, சைபர் கேப் கார்களின் உற்பத்தி 2026 முதல் தொடங்கும் எனவும் இதன் விலை 30 ஆயிரம் டாலர்களுக்குள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பிற்கு ரூ.25 லட்சமாகும். ஆனால் இறக்குமதி வரி காரணமாக இந்தியாவில் இதன் விலை குறைந்தது ரூ.50 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்கச் செலவுகள்:
சைபர் கேப் அல்லது ரோபோ டாக்ஸி என்பது தானாக இயங்கக்கூடிய வாகனம். இதற்கு ஓட்டுனர் தேவை இல்லை. தற்பொழுது இந்த சைபர் கேபில் இருவர் மட்டும் அமர்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டீயரிங் வீலோ அல்லது பெடல்களோ கிடையாது. எல்லாமே தானியங்கி முறையில் இயங்கும். நகரப் பேருந்துகளை ஒரு மைலுக்கு இயக்குவதற்கான செலவு ஒரு டாலர் ஆகும். ஆனால் இந்த ரோபோ டாக்ஸியை ஒரு மைலுக்கு இயக்க வெறும் 20 காசுகள் மட்டுமே செலவாகும். இதை பேருந்துகளுடன் ஒப்பிடும்போது அதன் பயண செலவு வெறும் 20% மட்டுமே என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புகள்:
இந்த தானியாங்கி வாகனங்கள் மனிதர்களால் இயக்கப்படும் வாகனங்களை விட 10 முதல் 20 மடங்கு பாதுகாப்பானவை என எலான் மாஸ்க் திட்ட வட்டமாக உறுதியளிக்கிறார். மேலும் அதன் விலை மற்றும் இயக்கச் செலவும் குறைவு. ஒரு நாளில் நீண்ட நேரம் காரில் பயணிக்க வேண்டியவர்கள் காருக்குள் தாங்கள் விரும்பும் வேலையை வசதியாக செய்து கொண்டே பயணிக்கலாம் என்கிறார் எலான் மாஸ்க்.
Also Read: யமஹாவுடன் இணையும் கேடர்ஹாம்! புதிதாக உருவாகும் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்…!
டெஸ்லாவின் சைபர் கேப் ஒரு மின்சார வாகனமாகும். இந்த வாகனங்களை பயன்படுத்தி எல்லாம் மாஸ்க் உபர், ஓலா போன்ற வாடகை வாகன தொழிலை தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்த ரோபோ டாக்ஸிகளை வாங்குபவர்கள் தங்கள் வாகனத்தை இந்த ஆப் சேவைக்கு வழங்கி பணம் சம்பாதிக்கலாம். இது வீட்டில் அமர்ந்து வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாக அமையும். ஆனால் இந்த ரெய்டு ஹைலிங் ஆப் எப்போது தொடங்கும் என்று அறிவிக்கப்படவில்லை. தற்போது டெஸ்லா நிறுவனம் 50 கேப் வாகனங்களை மட்டுமே தயாரித்துள்ளது. முழு அளவிலான உற்பத்தி 2026 ஆம் ஆண்டு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
இந்தக் காரில் பெடல்களோ ஸ்டீயரிங் வீல்களோ இல்லை. இரண்டு பேர் மட்டுமே அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரில் ஒரே ஒரு பெரிய திரை மட்டுமே நடுவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் எங்கு செல்ல வேண்டும் என்பதை அந்த திரையில் காருக்கு தெரிவித்து விட்டால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அந்த கார் நம்மை கொண்டு சேர்த்து விடும். அதைப் போல் முழுவதுமாக தானியங்கி முறையில் செயல்படக்கூடிய 20 நபர்கள் வரை அமர்ந்து பயணம் செய்யும் வகையிலான ரோபோ வேன் குறித்த அறிவிப்பையும் இந்த நிகழ்வில் எலான் மாஸ்க் வெளியிட்டுள்ளார்.
Also Read: Diwali Offer: தார் கார்களுக்கு ரூ.1.6 லட்சம் வரை தள்ளுபடி – மஹிந்திரா அளித்த ஆஃபர்!
சாத்திய கூறுகள்:
டெஸ்லா மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் மனிதர்கள் இல்லாமல் தானியாங்கியாக செயல்படும் கார்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் இதுவரை சொல்லும்படியான முன்னேற்றங்கள் எதுவும் இல்லை. ஒரு குறிப்பிட்ட பாதையில் இந்த தானியங்கி கார் சிறப்பாக செயல்பட முடிந்தாலும் பொது வெளியில் எப்படி சரியாக செயல்படும் என வல்லுனர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் இந்த தானியங்கி கார்களை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அரசு ஒப்புதல் கிடைப்பது சற்று கடினம் எனவும் இந்த கார்களால் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாது என்று உறுதி கிடைத்தால் மட்டுமே இதற்கு ஒப்புதல் கிடைக்கலாம் என்றும் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.