5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரூ.8 லட்சத்துக்குள் ஸ்டைலிஷ் கார்கள்.. இந்த லிஸ்ட்-ஐ கொஞ்சம் பாருங்க!

stylish SUVs: ரூ. 8 லட்சம் எக்ஸ்-ஷோரூம் பட்ஜெட் விலையில் பல்வேறு எஸ்.யூ.வி கார்கள் கிடைக்கின்றன. அந்த வகையில், இந்தியாவில், ரூ.8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விற்பனைக்கு கிடைக்கும் எஸ்.யூ.வி கார்கள் குறித்து பார்க்கலாம்.

ரூ.8 லட்சத்துக்குள் ஸ்டைலிஷ் கார்கள்.. இந்த லிஸ்ட்-ஐ கொஞ்சம் பாருங்க!
எஸ்.யூ.வி கார்கள்
Follow Us
intern
Tamil TV9 | Published: 28 May 2024 20:06 PM

ரூ.8 லட்சம் பட்ஜெட் விலை எஸ்.யூ.வி. கார்கள்: இந்திய கார்கள் சந்தையில் கடந்த 10 ஆண்டுகளாக எஸ்.யூ.வி ரக கார்கள் மும்முரமாக விற்பனையாகி வருகின்றன. ஒரு காலத்தில் இந்தியாவில் முதல்முறையாக கார் வாங்குபவர்களுக்கு மிகவும் விரும்பப்படும் பிரிவாக இருந்த ஹேட்ச்பேக்குகள், சந்தைப் பங்கில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டது. இந்த நிலையில், தற்போது ரூ. 8 லட்சம் எக்ஸ்-ஷோரூம் பட்ஜெட் விலையில் பல்வேறு எஸ்.யூ.வி கார்கள் கிடைக்கின்றன. அந்த வகையில், இந்தியாவில், ரூ.8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விற்பனைக்கு கிடைக்கும் எஸ்.யூ.வி கார்கள், அந்தக் கார்களின் என்ஜின் குறித்த விவரங்கள் உள்ளிட்டவை குறித்து இங்கு பார்க்கலாம். இதில் கார்களின் விலை ரூ.5,99,000ல் இருந்து தொடங்குகின்றன. இந்தக் கார்கள் பெரும்பாலானோர்களின் விருப்பத் தேர்வாகவும் உள்ளது.

தி பஸ்ச்

இந்தக் கார்கள் ரூ.5 லட்சத்து 99 ஆயிரம் விலையில கிடைக்கின்றன மேலும், டாடா பன்ச் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் SUV மட்டுமல்ல, கடந்த இரண்டு மாதங்களாக நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் கார் ஆகவும் உள்ளது. இந்தக் காரில் உள்ள உபகரணங்கள் தரமானதாக அறியப்படுகின்றன.

ஹூண்டாய் எக்ஸ்டர்

ஹூண்டாய் எக்ஸ்டர் கார்களின் விலை ரூ.6 லட்சத்து 12 ஆயிரத்து 800ஆக உள்ளன. மேலும், ஹூண்டாய் EXTER ஆனது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது. தொடர்ந்து, 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட CNG இன்ஜின் கிட் உடன் 1.2 லிட்டர் Bi-fuel Kappa பெட்ரோல் உடன் கிடைக்கிறது.
அம்சங்களைப் பொறுத்தவரை, மைக்ரோ எஸ்யூவியில் குரல் இயக்கப்பட்ட ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் டாஷ்கேம், முன் மற்றும் பின்புற கேமரா, 5.84 செமீ (2.31”) எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் ஆப் அடிப்படையிலான இணைப்பு மற்றும் பல ரெக்கார்டிங் முறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ரினால்ட் கிஹர் Renault Kiger

Renault Kiger மற்றும் Nissan Magnite ஆகிய இரண்டும் 1.0L டர்போ பெட்ரோல் அல்லது 1.0L நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின்கள் மூலம் இயக்கப்படுகின்றன. இரண்டு SUVக்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தரநிலையாக CVT மற்றும் 5-ஸ்பீடு ஈஸி-R AMT டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுடன் கிடைக்கின்றன.
பாதுகாப்பு வாரியாக, Kiger மற்றும் Magnite ஆனது ஓட்டுனர் மற்றும் முன்பக்க பயணிகளின் பாதுகாப்பிற்காக நான்கு ஏர்பேக்குகளுடன் வருகிறது, அதனுடன் ப்ரீடென்ஷனர்கள் மற்றும் டிரைவருக்கான லோட்-லிமிட்டர்களைக் கொண்ட சீட் பெல்ட்கள் உள்ளன. இந்தக் கார்களின் விலை ரூ.5,99,000 ஆகும்.

மகிந்திரா எக்ஸ்.யூ.வி 3எக்ஸ்ஓ

மகிந்திரா எக்ஸ்.யூ.வி 3எக்ஸ்ஓ கார்கள் ரூ.7,49,000 உடன் வருகின்றன. XUV 300 இன் பெரிதும் மறுவேலை செய்யப்பட்ட பதிப்பு, 3XO சிறந்த அம்சங்களை வழங்குகிறது. எஞ்சின் விருப்பங்களில் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் (109 bhp / 200 Nm), 1.5-லிட்டர் டீசல் எஞ்சின் (115 bhp / 300 Nm) மற்றும் 1.2-லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் எஞ்சின் (128 bhp / 230 Nm) ஆகியவை உள்ளன.

ஹீண்டாய் வெனு (Hyundai Venue)

இந்தக் கார்களின் விலை ரூ.7,94,000 ஆகும். இந்தக் காரில் மூன்று என்ஜின்களும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கின்றன. 82 bhp 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 118 bhp 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆகியவற்றுட்ன என்ஜின்கள் உள்ளன.

இதையும் படிங்க : 6 மணி நேரத்தில் சார்ஜிங்.. ஏதெர் புதிய ஸ்கூட்டர்: விலை என்ன?