5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Honda: அப்படிப்போடு.. ஹீரோவை பின்னுக்கு தள்ளிய ஹோண்டா நிறுவனம்!

இந்தியாவை பொறுத்தவை நாளுக்கு நாள் மக்கள் இருசக்கர வாகனம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஹீரோ, ஹோண்டா, பஜாஜ், டிவிஎஸ், சுசுகி என முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்கள் அவ்வப்போது பல அப்டேட்டுகளுடன் வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இப்படியான நிலையில் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் தரவுகள் வெளியாகியுள்ளது. 

Honda: அப்படிப்போடு.. ஹீரோவை பின்னுக்கு தள்ளிய ஹோண்டா நிறுவனம்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 20 Aug 2024 15:40 PM

வாகன விற்பனை: இரு சக்கர வாகன சந்தையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை விற்பனையில் அதன் பரம போட்டியாளரான ஹோண்டா நிறுவனம் பின்னுக்குத் தள்ளியுள்ள சம்பவம் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தியாவை பொறுத்தவை நாளுக்கு நாள் மக்கள் இருசக்கர வாகனம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஹீரோ, ஹோண்டா, பஜாஜ், டிவிஎஸ், சுசுகி என முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்கள் அவ்வப்போது பல அப்டேட்டுகளுடன் வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இப்படியான நிலையில் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் தரவுகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: Jio : இதைவிட குறைவான விலையில் 5ஜி ரீசார்ஜ் பிளான் இல்லை.. அதிரடி காட்டும் ஜியோ!

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்ட தகவலின்படி,  ஹோண்டா உள்நாட்டு மொத்த விற்பனையில் 18.53 லட்சம் யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் உள்நாட்டு மொத்த விற்பனையில் 18.30 லட்சம் யூனிட்டுகளை மட்டுமே ஈட்டியது. இருவருக்குமிடையேயான வித்தியாசம் சுமார் 21, 653 என தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் நெருங்கியுள்ளதால் அனைத்து தொழில்துறைகளும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வியாபாரத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளது.

இப்படியிருக்கும் நிலையில் மொத்த விற்பனையில் ஹோண்டா முன்னணியில் இருந்தபோதிலும், நிதியாண்டிற்கான சில்லறை விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் இன்னும் முதலிடத்தில் தான் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கியர் பைக்குகளை விட ஸ்கூட்டி மாடல் வாகனங்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநில வாகன சந்தையில் ஏற்பட்ட மாற்றமே ஹோண்டாவின் வளர்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Umanath IAS: ஸ்டாலினின் தனிச்செயலாளர்.. திமுக ஆட்சியில் அதிக கவனம் பெறும் உமாநாத் ஐஏஎஸ்!

ஹீரோ மோட்டோகார்ப் நீண்ட காலமாக இரு சக்கர வாகன சந்தையில் முன்னணியில் இருந்து வரும் நிலையில் இந்த சரிவு மிகப்பெரிய அளவில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. Fada தரவுகளின்படி, ஹோண்டாவின் சில்லறை சந்தைப் பங்கு ஏப்ரல் மாதம் 20 சதவிகிதமாக இருந்த நிலையில் ஜூலை மாதம் 24.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் ஹீரோ நிறுவன பங்கு 33 சதவிகிதமாக இருக்கும் நிலையில் 29.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் பஜாஜ் நிறுவனம் 7.5 லட்சமும், டிவிஎஸ் நிறுவனம் 10.8 லட்சமும், சுசுகி 3.5 லட்சமும் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மின்சார வாகன விற்பனையும் அதிகரித்துள்ளதால் அடுத்த காலாண்டு வாகன விற்பனையில் என்னென்ன மாற்றம் இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Latest News