ஹூண்டாய் போட்ட அசத்தல் திட்டம்! 600 மின்சார வாகன ஃபாஸ்ட் சார்ஜிங்!
Charging Stations For EV: இந்தியாவில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் போதிய அளவில் சார்ஜிங் நிலையங்கள் இல்லை என்பதால் சிலர் மின்சார வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு ஹூண்டாய் நிறுவனம் கூடுதலான ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளது
அடுத்த ஏழு ஆண்டுகளில் சுமார் 600 பொது EV ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை நாடு முழுவதும் அமைக்க இலக்கு வைத்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 50 பப்ளிக் பாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை அமைக்கப்பட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகன சந்தையில் பெருமளவில் வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபங்க்ஷன் ஹெட் கார்ப்பரேட் பிளானிங் தலைவர் ஜே வான் ரியூ தெரிவித்துள்ளார். இன்றைய நிலையில் நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்கும் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்ய சார்ஜிங் இன்ஃப்ராஸ்ரெச்சர் வசதிகள் இல்லாததால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கூடுதல் சார்ஜிங் நிலையங்கள்:
அதிக அளவிலான சார்ஜிங் ஸ்டேஷன் இல்லாத காரணத்தினால் மின்சார வாகனங்களை மக்கள் வாங்குவதில் தயக்கம் ஏற்படுகிறது. இந்தியாவில் மின்சார வாகன சந்தை வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் போதிய சார்ஜிங் நிலையங்கள் இல்லாததால் அதை கவனத்தில் கொண்டு நாடு முழுவதும் அதிகளவிலான சார்ஜிங் நிலையங்களை அமைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.
Also Read: Top Sales SUV Cars: இந்தியாவில் அதிகமாக விற்பனையான SUV கார்கள்.. முதலிடம் எது தெரியுமா?
இதன் மூலம் சார்ஜிங் செய்வது பற்றிய கவலையை தீர்க்க முடியும் என்று ஹூண்டாய் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே முக்கிய நெடுஞ்சாலைகளில் பப்ளிக் பாஸ்ட் மின்சார வாகன சார்ஜர்களை நிறுவுவதற்கு அந்த நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. தற்பொழுது மின்சார வாகனங்களுக்கான தேவை சந்தையில் அதிகரித்து வருவதால் அதன் அடிப்படையில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் அதிகாரி ஜே வான் ரியூ தெரிவித்துள்ளார்.
7.30 இலட்ச யூனிட் எனர்ஜி வினியோகம்:
இந்த நிறுவனம் பாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை அமைப்பது மூலமாக எல்லா வகையான பிராண்டுகளின் மின்சார கார் வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்பொழுது ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஏறக்குறைய 50,000 சார்ஜிங் நிலையங்களை விரிவுப்படுத்தியுள்ளது. இந்த நிலையங்கள் மூலமாக ஹூண்டாய் மற்றும் ஹூண்டாய் அல்லாத மின்சார வாகன வாடிக்கையாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு 7.30 இலட்சம் யூனிட் எனர்ஜி விநியோகிக்கப்பட்டுள்ளது
தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்:
இந்த நிலையில் 2027 ஆம் ஆண்டிற்குள் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹூண்டாய் நிறுவனம் கையெழுத்து உள்ளது. மேலும் இது தவிர இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலத்தில் பத்து சார்ஜிங் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சார்ஜிங் நிலைய சேவைகளை தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் தெரிந்து கொள்வதற்கு myhyundai செயலியை பயன்படுத்தலாம்.
Also Read: Kia Syros Car : நச்சுனு ஒரு கார்.. கியா சிரோஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்!
சென்னையில் உள்ள BSR மால் மற்றும் ஸ்பென்சர் பிளாசா ஆகிய இடங்களிலும் திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டல் சீசன்ஸ் ஆகிய மூன்று இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் தற்போது முழுமையாக செயல்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள சுமார் 10,000 சார்ஜிங் நிலையங்களுடன் myHyundai ஆப் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.சென்னை, பெங்களூர், மும்பை, புனே,குருகிராம், ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களில் ஹூண்டாய் EV சார்ஜிங் நிலையங்கள் அமைந்துள்ளன.