5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali Offer: தார் கார்களுக்கு ரூ.1.6 லட்சம் வரை தள்ளுபடி – மஹிந்திரா அளித்த ஆஃபர்!

Mahindra Thar offer: விற்பனையை அதிகப்படுத்துவதற்காக தார் கார் மீது ரூ.1.6 லட்சம் வரை தீபாவளி பண்டிகை கால தள்ளுபடியை அறிவித்திருக்கிறது மஹிந்திரா நிறுவனம். 3 கதவு தார் கார்களின் கையிருப்பு மஹிந்திரா விற்பனை நிலையங்களில் அதிகமாக உள்ளதால் அதனின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு அந்த கார்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது

Diwali Offer: தார் கார்களுக்கு  ரூ.1.6 லட்சம் வரை தள்ளுபடி – மஹிந்திரா அளித்த ஆஃபர்!
மஹிந்திரா தார் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Updated On: 11 Oct 2024 11:16 AM

மகேந்திரா தார் தள்ளுபடி: தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் வந்து விட்டாலே தள்ளுபடிகளுக்கு பஞ்சம் இருக்காது. எல்லாம் முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகளை வாரி வழங்குவார்கள். ஆனால் அந்த தள்ளுபடிகளிலும் சில யுக்திகளை கையாண்டு கிடப்பில் இருக்கும் அவர்களின் தேவையை அதிகப்படுத்தும் நோக்கில் மஹிந்திரா நிறுவனம் தள்ளுபடி அறிவித்திருக்கிறது. மகேந்திரா நிறுவனம் வெளியிட்ட Thar ROXX இன் விற்பனையில் ஏற்பட்ட மந்த நிலையை எதிர்கொள்ளும் வகையில் இந்த தீபாவளிக்கு புதிய திட்டத்துடன் களம் கண்டுள்ளது. அதாவது பிரபலமான தார் 3 கதவு எஸ்யூவிக்கு அட்டகாசமான தள்ளுபடி வழங்கியுள்ளது.பெரிய 5 கதவு Thar ROXX காரின் அறிமுகம் வாடிக்கையாளர்களை அதை நோக்கி முன் பதிவுகள் செய்ய இதனால் மூன்று கதவு வாகனங்கள் டீலர்கள் இடம் கையிருப்பில் உள்ளது. அதன் வகையில் இந்த ரக கார்களின் தேவையை அதிகரிக்கவும் தார் 3 கதவு வாகனத்தை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்காகவும் அந்த நிறுவனம் அதன் விலையில் தள்ளுபடிகள் மற்றும் கூடுதல் பயன்களை வழங்குகிறது.

எல்லா வேரியண்டுகளுக்கும் தள்ளுபடிகள்:

AX டீசல் மேனுவல் 2WD மற்றும் LX பெட்ரோல் தானியங்கி 2WD போன்ற மாடல்களுக்கு மகேந்திரா தார் மீது பண்டிகைக்கால தள்ளுபடிகள் ஆக ரூ.1.25 லட்சத்தில் தொடங்குவதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேனுவல் மற்றும் தானியங்கி பதிப்புகள் உள்பட AX மற்றும் LX வகைகளுக்கு ரூ.1.3 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடியை மேலும் இனிதாக்குவதற்கு மஹிந்திரா ஒவ்வொரு வேரியண்டுகளுக்கும் ரூ.25,000 மதிப்புமிக்க இலவச அக்சஸரீஸ்களை வழங்குகிறது.

Also Read: யமஹாவுடன் இணையும் கேடர்ஹாம்! புதிதாக உருவாகும் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்…!

மகேந்திரா தார் எர்த் பதிப்பு:

4WD தரத்துடன் வரும் SUVயின்‌ சிறப்பு பதிப்பான மகேந்திரா தார் எர்த் பதிப்புக்கு அதிகபட்ச தள்ளுபடி பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். எர்த் பதிப்பு இந்த தீபாவளிக்கு ரூ.1.6 லட்சம் வரை தள்ளுபடி பெறுகிறது. இந்த மாடல் அதன் பிரத்யேகமான ‘டெசர்ட் ப்யூரி’ மேட் பினிஷ், தனித்துவமான எர்த் பதிப்பு பேட்ஜ்கள் மற்றும் டூயல் டோன் பீஜ் மற்றும் பிளாக் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் கூடிய ஸ்டைலான உட்புறம் ஆகியவற்றால் வேறுபடுகிறது. பாலைவன கருப்பொருள் வடிவமைப்பு, ஹெட்ரெஸ்ட்களில் டூன் வடிவ லைன் ஆர்ட் மற்றும் பல்வேறு உட்புறக் கூறுகளில் டார்க் குரோம் வகைகளில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

டெலிவரி மற்றும் இருப்பு:

தார் 3 கனவு கார்கள் தற்போது பெரும்பாலான மகேந்திரா விற்பனை நிலையங்களில் முன்பதிவு ஆகாததால் காத்திருப்பு காலம் குறைவாகவே உள்ளது. எனவே விரைவாக டெலிவரிகளை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சரியான தேர்வாக இருக்கும். மேலும் தார் 2WD பெட்ரோல் மற்றும் 2WD LX டீசல் போன்ற உயர் தேவை மாறுபாடுகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு சுமார் ஒரு மாதம் காலம் காத்திருக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் மகேந்திரா தார் காரை ஆஃப் ரோடு ஆர்வலர்களும் இந்த பண்டிகை காலத்தில் கணிசமான சேமிப்புடன் கார் வாங்குபவர்களுக்கும் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.‌

முன்பதிவில் சாதனை படைத்த Thar ROXX:

3 கதவு Thar ROXX மாடல்களின் விற்பனை மந்தமாக இருக்கும் நிலையில் அதனை ஈடு செய்யும் வகையில் மஹிந்திர நிறுவனம் அவற்றுக்கு தீபாவளி தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. ஆனால் கடந்த 3ஆம் தேதி அன்று 5 கதவு Thar ROXX கார்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த காரினை சுமார் 1,76,218 வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பணமாக ரூ.21,000 பெறப்பட்டது. சுமார் ஒரு நிமிடத்திற்கு 2,937 முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

Also Read: ஒரு நிமிடத்திற்கு 2,937 கார்கள்.. முன்பதிவில் சாதனை படைத்த Thar ROXX SUV!

சிறப்பம்சங்கள்:

வழக்கமாக‌ Thar ரக கார்களில் இருக்கும் அம்சங்களை மேம்படுத்தி சற்று கூடுதல் வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பதிப்பில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 வீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் போன்ற விருப்பங்களுடன் வழங்கப்பட இருக்கிறது. ஆனால் 4×4 மாடல்களில் மட்டுமே டீசல் இன்ஜின் விருப்பம் உள்ளது.

 

Latest News