ஒரு நிமிடத்திற்கு 2,937 கார்கள்.. முன்பதிவில் சாதனை படைத்த Thar ROXX SUV!
Mahindra Thar ROXX Booking: Thar ROXX காருக்கான முன்பதிவை மஹிந்திரா நிறுவனம் இன்று தொடங்கியது. அக்டோபர் 3 அன்று முன்பதிவு தொடங்கப்படும் என்று முன்னரே மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் இன்று அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அதிக அளவிலான எண்ணிக்கையைப் பெற்று சாதனை பெற்றுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா Thar ROXX SUV மாடல்களுக்கான முன்பதிவு இன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டதில் அதிக அளவிலான முன்பதிவு எண்ணிக்கையை பெற்று சாதனை படைத்துள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கிய முன்பதிவில் 1,76,218 யூனிட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முன்பதிவு செய்தவர்களுக்கு கார் டெலிவரி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. இரண்டு மாறுபாடுகளில் வெளிவர இருக்கும் இந்தக் காரின் முன்பதிவுக்கு ரூ.21,000 முன் பணமாக பெறப்பட்டது.
வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்தை பொறுத்து 4X2 அல்லது 4×4 டிரைவ் சிஸ்டம் விருப்பங்களில் இந்த காரை வாங்கலாம். மேலும் இவை MX1, MX3, AX3L, MX5, AX5L மற்றும் AX7L ஆகிய ஆறு வகைகளில் சந்தையில் கிடைக்கும்.
இதில் 4×2 Thar ROXX வகைகளின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.12.99 லட்சத்திலிருந்து ரூ.20.49 லட்சம் வரையிலும் 4×4 Thar ROXX வகைகளின் விலை ரூ.18.79 லட்சத்திலிருந்து ரூ.22.49 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காரின் சிறப்பம்சங்கள்:
மஹிந்திரா நிறுவனம், வழக்கமான Thar சிறப்பு அம்சங்களில் இருந்து சற்று மேம்படுத்தி குடும்பத்துடன் பயணம் செய்ய சற்று கூடுதல் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பதிப்பில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கப்பட இருக்கிறது. ஆனால் 4×4 மாடல்களில் மட்டுமே டீசல் இன்ஜின் விருப்பம் உள்ளது.
கவர்ச்சிகரமான வடிவமைப்புடன் பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய கார் முந்தைய மாடல்கள் போல் LED ப்ரொஜெக்டர் ஹெட் லைட் லைட்டுகள், C வடிவ LED DRLs, வட்ட மூடுபனி விளக்குகள், போர்த்தி பம்பர் போன்ற நிலையான.
அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இது 19 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டெயில் கேட் பொருத்தப்பட்ட உதிரி சக்கரம், LED டெயில் லைட்டுகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
Also Read: Citroen C3 கார் .. 2024 மாடல் எப்படி? புதிய மாற்றங்கள் என்னென்ன?
ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளேயை ஆதரிக்கும் 10.25 இன்ச் தொடு திரை இன்போடைன்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல பிரிமியம் அம்சங்களையும் காரின் உட்புறம் கொண்டுள்ளது. இது முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், முன் காற்றோட்டமான இருக்கைகள், பனோரமிக் சன் ரூஃப், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் பின் புற ஏசி வென்ட்கள் ஆகியவற்றை பெருகிறது.
இந்த புதிய காரில் பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள், ESE, மூன்றுமுனை சீட் பெல்ட், ஆல் வீல் டிஸ்க் பிரேக், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், முன் பார்க்கின் சென்சார், க்ரூஸ் கண்ட்ரோல், 360° கேமரா, ஆட்டோ ஹெட்லைட், வைப்பார்கள், மற்றும் பிளைன்ட் ஸ்பாட் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை உள்ளன.
கூடுதல் பாதுகாப்பிற்காக, புதிய காரில் டாப் எண்ட் மாடலில் லெவல் 2 அட்வான்ஸ் டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது பல செயலில் உள்ள பாதுகாப்பு அம்சங்களுடன் சாத்தியமான விபத்துகளை தடுக்கிறது.
தேவையின் அடிப்படையில் தயாரிப்பு:
Thar ROXX ஒரு முக்கிய தயாரிப்பாக வடிவமைக்கப்படவில்லை ஆனால் இந்த SUV பிரிவில் தேவைகள் மற்றும் அவசியங்களை மனதில் வைத்துக்கொண்டு ஒரு முக்கிய SUV ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று கதவு பதிப்பில் கூட அதன் கொள்ளளவு பெரியதாக இருக்கும். அதை நாங்கள் நிறுத்த விரும்பவில்லை மாறாக இந்த பிராண்டை இன்னும் பெரிதாக்க முடியும் என நாங்கள் நினைக்கிறோம்” என ஆட்டோ வணிகத்திற்கான ED மற்றும் CEO ராஜேஷ் ஜெஜூரிகர் தெரிவித்துள்ளார்.
சாதனை முறியடிப்பு:
காலை 11 மணிக்கு தொடங்கப்பட்ட முன்பதிவு ஒரு மணி நேரத்திற்குள் 1,76,218 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன . சராசரியாக, ஒரு நிமிடத்திற்கு 2,937 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே, ஸ்கார்ப்பியோ-என் அரை மணி நேரத்தில் 1 லட்சம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்திருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது
Also Read: ஹோண்டாவின் முதல் EV ஸ்கூட்டர்.. இந்தியாவில் அறிமுகம்.. முழு விவரம்!