நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மகிந்திரா எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் எஸ்யூவியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மகிந்திரா எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் எஸ்யூவி ரூ.21.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் சென்னை) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மகிந்திரா எக்ஸ்.இ.வி 9இ கார்களின் டெலிவரி பிப்ரவரி 2025 இல் தொடங்கும். இந்த எலக்ட்ரிக் கார் பிராண்டின் நவீன வடிவமைப்பு பல அம்சங்களுடன் வருகிறது. இது இந்திய வாகன சந்தையில் புதிய அத்தியாயம் ஆக பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரிக் எஸ்யூவியின் கேபின், அண்டர்ஃப்ளூர் பேட்டரி பேக், போதிய இடவசதியுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக, வாகன உற்பத்தியாளர் கேபினை தொழில்நுட்பத்தில் வடிவமைப்பதில் இருந்தும் பின்வாங்கவில்லை.
மகிந்திரா எக்ஸ்.இ.வி 9இ கார்களின் பேட்டரி பேக்கை 140 கே.டபிள்யூ டி.சி சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்ய முடியும். இந்த பேட்டரி 286 பிஎச்பி பவரையும், 380 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும் மின்சார மோட்டாரை இயக்குகிறது.