Maruti Suzuki: பட்ஜெட் கார் வாங்க திட்டமா? மாருதி கார்களுக்கு அதிரடி தள்ளுபடி..
Car Offer : முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனமான மாருதி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் கார்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் மினி கார்களுக்கு தள்ளுபடியை வழங்குகிறது. ஆல்டோ மற்றும் எஸ் பிரஸ் கார்களின் விற்பனை குறைந்து வரும் பின்னணியில் இந்நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
மாருதி கார் : இந்திய கார் சந்தையை பொருத்தவரை மாருதி மிக முக்கிய நிறுவனம் ஆகும். பட்ஜெட் வகை சிறிய கார்களை அதிகளவில் விற்பனை செய்யும் மாருதி தற்போது கொஞ்சம் தடுமாறத் தொடங்கியுள்ளது. பட்ஜெட் சிறிய கார்கள் மைலேஜிலும், பட்ஜெட்டிலும் பாசிட்டிவ் என்றாலும் பாதுகாப்பு அம்சத்தில் நெகட்டிவாகவே உள்ளது. அதனால் இப்போதெல்லாம் கார்களின் பாதுகாப்பு அம்சத்தை வாடிக்கையாளர்கள் அதிகம் கவனம் கொள்கின்றனர். அதனால் சிறிய வகை கார்களுக்கு மவுசு இல்லாமல் இருக்கிறது.
முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனமான மாருதி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் கார்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் மினி கார்களுக்கு தள்ளுபடியை வழங்குகிறது. ஆல்டோ மற்றும் எஸ் பிரஸ் கார்களின் விற்பனை குறைந்து வரும் பின்னணியில் இந்நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த மினி கார்களின் விற்பனை 10,648 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 12,209 வாகனங்கள் விற்பனையானது இந்த ஆண்டு 10,648 ஆக குறைந்துள்ளது.
Also Read : பட்ஜெட் விலையில் சூப்பர் காரா? கிராண்ட் ஐ10 கார் எப்படி இருக்கு?
இந்நிலையில், S-Presso LXI பெட்ரோல் வேரியன்ட்டின் விலை ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளதாக மாருதி சுஸுகி இந்தியா தெரிவித்துள்ளது. கே10 விஎக்ஸ்ஐ பெட்ரோல் பதிப்பின் விலை ரூ.6,500 குறைக்கப்பட்டுள்ளது என ஒழுங்குமுறை ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட விற்பனை உடனடியாக அமலுக்கு வரும் என்று நிறுவனம் திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. குறைக்கப்பட்ட விலைகளுடன், ஆல்டோ கே10 இன் ஆரம்ப மாடலின் விலை ரூ. 3.99 லட்சம். உயர் ரக காரின் விலை ரூ. 5.96 லட்சம் கிடைக்கிறது. எஸ்பிரெசோவைப் பொறுத்தவரை, ஆரம்ப மாடலின் விலை ரூ. 4.26 லட்சத்திலிருந்து ரூ. 6.11 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை வரை இருக்கிறது.
அதேசமயம், பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட் போன்ற மாடல்களின் விற்பனையும் 20 சதவீதம் குறைந்துள்ளது. இந்த அனைத்து கார்களும் கடந்த ஆண்டு 72,451 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 58,051 யூனிட்களை விற்பனை செய்துள்ளன. ஆகஸ்ட் 2024 இல் ஒட்டுமொத்த விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு 4 சதவீதம் சரிவை மாருதி சுஸுகி அறிவித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த மாதம் 1,81,782 யூனிட்களை விற்பனை செய்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 189,082 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
Also Read : கார் மைலேஜ் அதிகரிக்கணுமா? இந்த தவறுகளை செய்யாதீங்க!
ஒட்டுமொத்தமாக, நாட்டில் பயணிகள் வாகனங்களின் விற்பனை 8 சதவீதம் குறைந்துள்ளது. ஆகஸ்ட் 2023 இல் 1,56,114 யூனிட்களில் இருந்து 1,43,075 யூனிட்களாக விற்பனை குறைந்துள்ளது. குறிப்பாக மினி மற்றும் சிறிய கார் பிரிவுகளின் விற்பனை குறைந்துள்ளது. ஆனால் Grand Vitara, Brezza, Ertiga, Invicto, Franks, XL6 போன்ற மாடல்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 58,746 யூனிட்களில் இருந்து 62,684 யூனிட்களாக அதிகரித்துள்ளது.