புதிய மாருதி சுஸூகி டிசையர்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன?
Maruti Suzuki Dzire Launch: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸூகி டிசையர் வெளியிடப்பட்டுள்ளது. நான்காவது வெர்ஷனான இந்த மாடல் பாதுகாப்பு சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்த கார் ஹுண்டாய் அவுரா, ஹோண்டா அமேஸ், டாடா டிகோர் ஆகிய கார்களுடன் சந்தையில் களமிறங்குகிறது. இந்த புதிய மாருதி சுஸூகி டிசையர் காரின் விலை ரூ.6.79 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
பல்வேறு விதமான கார்கள் தொடர்ந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கார்களின் மீதான மோகம் காரணமாக அனைத்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கார்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் மாருதி சுஸூகி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய டிசையர் மாடல் கார் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது. இந்த மாடல் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இந்த கார் பாதுகாப்பு சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. ஐந்து நட்சத்திர மதிப்பீடு பெற்ற முதல் மாருதி சுஸூகி கார் என்ற சிறப்பை பெற்றுள்ளது இந்த டிசையர் கார். பாதுகாப்பு அம்சங்களில் இதுவரை டாடா நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
ஆனால் இந்த மாருதியின் டிசையர் அதற்கு போட்டியாக களம் இறக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் சன் ரூஃப் வசதியும் கொண்டுள்ளது. பாதுகாப்பை அதிகரித்து ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற இந்த காரின் விலை என்ன அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
காரின் சிறப்பம்சங்கள்:
இந்த புதிய டிசையர் கார் 1.2 லிட்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் மூலம் 5 கியர் மற்றும் AMT அலகுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆற்றல் வெளியீடு 80bhp மற்றும் 112Nm என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 68 bhp மற்றும் 102Nm ஆற்றலை உருவாக்கக்கூடிய CNG பதிப்பும் வழங்கப்பட உள்ளது.
புதிய டிசையர் காரின் முன் பக்கத்தில் கிடைமட்ட ஸ்லைடுகள், LED ஹெட் லேம்புகள், முன் மற்றும் பின்புற பம்பர்கள், டூயல் தோல் அலாய் வீல்கள், LED டைல் லைட்டுகளுக்கான முக்கோண வடிவம் ஆகியவையுடன் வெளி வருகிறது.
Also Read: Highest Sale: அக்டோபர் மாதத்தில் அதிகபட்ச விற்பனையை பதிவு செய்த மஹிந்திரா நிறுவனம்…
முதல் மின்சார சன் ஃப்ரூப் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு புதிய டூயல் ஸ்டோன் இன்டீரியர் வகையானது. 9 அங்குல தொடுத் திரை, இன்போடைன்மென்ட் சிஸ்டம், பிளாட் பாட்டம் ஸ்டேரிங், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல், ரியல் ஏசி வென்டகள் மற்றும் தானியங்கி காலநிலை கட்டுப்பாடு ஆகிய அம்சங்களோடு வெளிவருகிறது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஸ்விஃப்டின் கேபினை போலவே இந்த புதிய டிசையர் காரிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த காதில் புதிய டூயல் டோன் ஸ்கீமில் மரத்தால் செய்யப்பட்ட அலங்காரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்:
டிசையர் 2024 ஐந்தாம் வெர்ஷன் ஹார்டெக்ட் இயக்குத்தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஹார்டெக்ட் இயக்குத்தளம் அதிர்வை குறைத்து, மோதலின் போது அதை சமமாக பரவச் செய்து, பயணிகளின் மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும் காரின் அமைப்பு 45 சதவீதம் உயர் இழுவிசை ஸ்டீலை மேலும் நிலையான பாதுகாப்பு அம்சங்களுக்கு ஆறு ஏர் பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட், அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட், ஐசோ ஃபிக்ஸ் மவுண்ட்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பாதுகாப்பு அம்சங்களை சோதனை செய்த குளோபல் NCAP அமைப்பு இந்த டிசையர் காருக்கு 5 நட்சத்திர மதிப்பீடை வழங்கி இருக்கிறது.
விலை:
இந்த டிசையர் செடானின் காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.6.79 முதல் ரூ.10.14 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் LXi, VXi, Zxi மற்றும் ZXi Plus ஆகிய நான்கு வகைகளில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி விருப்பத்தை பெறுவார்கள். மேலும் இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டட் ட்ரான்ஸ்மிஷன் கிடைக்கும்.
டிசையர் மாறுபாடு விலை
- LXi ₹6.79 லட்சம்
- VXi ₹7.79 லட்சம்
- ZXi ₹8.89 லட்சம்
- ZXi பிளஸ் ₹9.69 லட்சம்
Also Read: Tata Motors: இந்த கார் செம பாதுகாப்பு.. ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்ற டாடா கர்வ் மாடல்கள்!
தானியங்கி கியர் ஷிப்ட் (ஏஜிஎஸ்) மாறுபாடு விலை:
- VXi ₹8.24 லட்சம்
- ZXi ₹9.34 லட்சம்
- ZXi பிளஸ் ₹10.14 லட்சம்
- VXi CNG ₹8.74 லட்சம்
- ZXi CNG ₹9.84 லட்சம்
இந்த விலைகள் டிசம்பர் 31, 2024 வரை மட்டுமே செல்லுபடியாகும். அதற்குப் பின்னர் இந்த விலை அதிகரிக்கப்படலாம்.