மாருதி ஸ்விஃப்ட் CNG மாடல்… அசர வைக்கும் சிறப்பம்சங்கள்!
Maruti Suzuki Swift CNG Car Launch: 2005 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் தற்பொழுது வரை நன்மதிப்பை பெற்று வருகிறது. சந்தையில் பெருகிவரும் CNG மாடல் கார்களின் தேவையின் அடிப்படையில் மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் தற்பொழுது CNG மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சுஸூகி அறிமுகப்படுத்தும் 14வது CNG மாடல்.
மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் CNG மாடல்: தற்பொழுது CNG கார்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் வாகன நிறுவனங்கள் தங்களுடைய பிரபலமான மாடல் கார்களை CNG முறையில் வாடிக்கையாளர்களுக்கு வெளியிடத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் மொத்த உள்நாட்டு கார் விற்பனையில் முன்னணியில் இருக்கும் மாருதி சுஸூகி, கடந்த மே மாதம் வாடிக்கையாளர்களுக்காக ஸ்விஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தி நான்கு மாதங்கள் கடந்த நிலையில் CNG கார்களின் தேவை அதிகரித்து வருவதால் தற்பொழுது ஸ்விஃப்ட் CNG மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சுஸூகி அறிமுகப்படுத்தும் 14வது CNG கார் மாடல். இந்த ஸ்விஃப்ட் CNG மாடல் கார் சுமார் 32 கிமீ மைலேஜ் கொடுக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்விஃப்ட் மாடல் கார்கள் முதன் முதலாக 2005-ஆம் ஆண்டு அறிமுகமானது. அது முதல் தற்போது வரை இந்தியாவில் நன்மதிப்பைப் பெற்று வருகிறது
புதிய ஸ்விஃப்ட் CNG மாடல்:
ஸ்விஃப்டின் இந்த புதிய CNG மாடல் V, V(O), Z ஆகிய மூன்று வகைகளில் பெற முடியும். இந்த புதிய மாடல் ஸ்விஃப்டின் அனைத்து வகைகளிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் (Manual Gear Box) ஆப்சன் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (Automatic Transmission) விருப்பத்தோடு ஸ்விஃப்டின் CNG மாடலை வாங்க முடியாது. மேலும் மாருதி ஸ்விஃப்ட் CNG மற்றும் பெட்ரோலில் புதிய Z சீரிஸ் இன்ஜினை அறிமுகப்படுத்தி உள்ளது. CNG மாடலில் உள்ள 1.2 லிட்டர் இன்ஜின் 69.75 பி எஸ் பவரையும் (PS Power – Pferdestarke Power. ஒரு பிஎஸ் பவர் என்பது 0.9863 குதிரை திறனுக்கு ஒப்பானது), 101.8 என் எம் டார்க்கையும் (NM Torque – Newton meters). உற்பத்தி செய்கிறது. இது ஐந்து ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடனும் வழங்கப்படுகிறது.
பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் Z சீரிஸ் இன்ஜினும் கிடைக்கிறது. ஆனால் இது 81.57 பிஎஸ் பவரையும், 111.7 என் எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் உடன் AMT (Automated Manual Transmission) டிரான்ஸ்மிஷன் ஆப்சனையும் கொண்டுள்ளது. பழைய CNG மாடலான ஸ்விஃப்டை விட புதிய மாடலில் ஆறு சதவீதம் அதிக மைலேஜ் கிடைக்கும் என்று மாருதி சுஸுகி நிறுவனம் கூறுகிறது. இந்த புதிய மாடல் ஒரு கிலோ CNGயில் 32.85 கிமீ தூரத்தை கடக்கிறது. பெட்ரோல் வகையைப் பொறுத்தவரை, இது லிட்டருக்கு 24.8 முதல் 25.75 கிமீ மைலேஜ் தரும். மாருதி ஸ்விஃப்ட் பெட்ரோல் மாடல் ₹6.49 இலட்சம் முதல் ₹9.44 லட்சம் வரை விற்பனையாகிறது. CNG மாடல் ₹8.19 இலட்சம் முதல் ₹9.19 லட்சம் வரை இருக்கும்.
Also Read: Tata Motors Discounts: கார்களுக்கு ரூ.2.05 லட்சம் வரை தள்ளுபடி.. டாடா கொடுக்கும் அடடே ஆஃபர்!
அசர வைக்கும் அம்சங்கள்:
புதிய மாடலை அறிமுகம் செய்து வைத்து பேசிய மாருதி சுஸூகியின் விற்பனை பிரிவின் மூத்த செயல் அதிகாரி பார்த்தோ பானர்ஜி பேசுகையில், “ஸ்விஃப்ட் பிராண்ட் எப்போதும் உத்வேகமான செயல் செயல் திறனுடனும் தனித்துவமான பாணியுடனும் இருக்கும். புதிய ஸ்விஃப்ட் CNG மாடலை அறிமுகம் செய்வது மூலமாக அதன் வளத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல் அடுத்த கட்ட புதிய உயிர்த்திற்கு கொண்டு 6 ஏர் பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வென்ட், வயர்லெஸ் சார்ஜர், 60:40 ஸ்பிலிட் ரியர் இருக்கைகள் போன்ற பல்வேறு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று அவர் தெரிவித்தார்.
சந்தா மூலமாவும் வாங்கலாம்:
புதிய ஸ்விஃப்ட் CNG மாருதி சுஸூகி சந்தா மூலமாவும் கிடைக்கிறது. அனைத்தையும் உள்ளடக்கிய இந்த மாதாந்திர சந்தா ரூ.21,628 முதல் தொடங்குகிறது. இந்த சந்தா திட்டத்தில் முழு பதிவு, சேவை மற்றும் பராமரிப்பு, காப்பீடு மற்றும் ரோடு சைடு அசிஸ்டன்ட் என அனைத்து முக்கிய செலவுகளையும் உள்ளடக்கியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களுக்குள் புதிய ஸ்விஃப்ட் இந்தியாவில் 67,000 யூனிட் விற்பனையை தாண்டி உள்ளது.
Also Read: Best Two Wheelers: சூப்பர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் டாப் 6 பைக் மற்றும் ஸ்கூட்டர்!